டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ விமர்சனம்

சினிமா விமர்சகர்கள் யூடியூப்பில் ஒரு படத்தின் விமர்சனத்தை நெகடிவாக சொல்லும்போது அதனை பார்க்கும் மக்கள் தியேட்டருக்கு வராமல் போய்விடுகிறது இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த சினிமா விமர்சனம் செய்யும் யூ டியூபர்களை ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி என்கிற பெயரில் அவர்களது கண்ணுக்கு மட்டும் மிக பிரமாண்டமாக ஜொலிக்கும் பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து பேயாக இருக்கும் செல்வராகவன் கொலை செய்து வருகிறார்.
இந்த மாதிரி நேரத்தில் யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சினிமா விமர்சகர் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு குடும்பத்துடன் வர அழைப்பு வருகிறது.
அந்த தியேட்டரை பார்த்ததும் அங்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்த சந்தானம் அப்பா நிழல்கள் ரவி அம்மா கஸ்தூரி தங்கை யாஷிகா ஆனந்த் மற்றும் காதலி கீதிகா திவாரி என அனைவரும் சிறப்பு காட்சியின் அழைப்பின் பேரில் ஜொலிக்கும் தியேட்டருக்கு சென்றிருப்பதை தெரிந்து கொண்டதும் அவர்களை காப்பாற்ற அவரும் அங்கு செல்கிறார்.
மொட்டை ராஜேந்திரனும் அவருடன் அங்கு செல்ல அவரும் சந்தானமும் தியேட்டரில் சிக்கி கொள்கிறார்கள்.
சந்தானத்தின் குடும்பமோ அந்த தியேட்டரில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்களுடன் ரெடின் கிங்லியும்,கெளதம் வாசு தேவ மேனனனும் அங்கே இருக்கிறார்கள்.
இதை தெரிந்து கொண்ட சந்தானம் செல்வராகவனிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்குகிறார்.சந்தானம் செல்வராகவன் பேயிடமிருந்து தன் குடும்பத்தையும் மற்றவர்களையும் காப்பாற்றினாரா இல்லையா என்பதே மீதிக்கதை.கதையின் நாயகனாக சந்தானம்
வழக்கமான பாணியில் காதல்,காமெடி,ஆக்க்ஷன்,நடனம் என்று தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார்.
நாயகி கீதிகா திவாரி காதலி மற்றும் பேயாக தனது பங்கை பூர்த்தி செய்துள்ளார்.
மற்றும் மொட்டை ராஜேந்திரன்,நிழல்கள் ரவி,கஸ்தூரி,யாஷிகா ஆனந்த்,கெளதம் வாசுதேவ் மேனன்,செல்வராகவன்,மாறன், ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஆப்ரோவின் இசையும், தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்துள்ளது.
பேய் கதையிலேயே மிகவும் வித்தியாசமான கதையாக வடிவமைத்து காமெடி கலந்த திரைக்கதையுடன் படத்தை சிறந்த முறையில் இயக்கியுள்ள இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள்.
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’அனைவரும் ரசிக்கும்படியான வேற லெவல் காமடி த்ரில்லர்.