அஸ்வின் குமார் தூள் பேட்டை போலிஸ் ஸ்டேஷனுக்கு ACP யாக வருகிறார்.இந்த நேரத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் பாடினி குமார் அங்கு நடக்கவிருக்கும் மூன்று கொலைகளை பற்றி கூறுகிறார்.தூல்பேட் பகுதியின் தினசரி குழப்பங்கள், வன்முறைகள்,விசித்திரமான அக்கம்பக்கத்துக் குழப்பங்கள் என பல்வேறு பிரச்சினைகள் வழக்கமாகச் சந்திக்கும் போலீஸ் நிலையம் அப்பகுதியில் பாடினி குமார் சொன்ன அந்த மூன்று கொலைகள் எதர்க்காக நடக்கிறது,கொலை செய்யப்பட்டவர்கள் யார்,யார்,அஸ்வின் குமார் இதை கண்டுபித்தாரா என்பதே மீதிக்கதை.

அஷ்வின் குமார் வலுவான கதாப்பாத்திரத்தை கையில் எடுத்து சிறப்பான முறையில் நடித்துள்ளார்.

மற்றும் பாடினி குமார்,குரு லக்ஷ்மண்,ப்ரீதி ஷர்மா,ஸ்ரீது கிருஷ்ணன் ஆகியோர் நம்பகமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
அஷ்வத்தின் இசையும், என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.

இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து,சிறந்த க்ரைம் த்ரில்லராக இயக்கியிருக்கும இயக்குனர் ஜே.ஜெஸ்வினிக்கு பாராட்டுகள்.
தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன் அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கக்கூடிய வெப் சீரிஸ்.
