kollywood news

டிஸ்கோ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

**செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!*

இயக்குநர் உல்லாஸ் செம்பனின் அடுத்த பிரமாண்டம் – டிஸ்கோ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’ – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்!*

‘அஞ்சக்கள்ளகோக்கன்’ (Anchakkallakokkan) படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டிஸ்கோ’ (Disco) படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகு, பிரபல நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

ஆண்டனி வர்கீஸுடன் இணைந்து தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ் மற்றும் வினீத் தட்டில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர்கள் அனைவரும் கருப்பு உடையில் கையில் துப்பாக்கிகளுடன் சர்வதேச ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் பாணியில் அல்ட்ரா-ஸ்டைலிஷ் தோற்றத்தில் காட்சிளிக்கின்றனர். டைட்டில் லோகோவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி குறியீடு, இது ஒரு மிகச்சிறந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் கன்-ஃபைட் என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அல்ட்ரா-மாஸ் சர்வதேச ஸ்டைலில் உருவாகியுள்ள ‘டிஸ்கோ’ திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

 

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: உல்லாஸ் செம்பன்
திரைக்கதை: செம்பன் வினோத் ஜோஸ்
ஒளிப்பதிவு: ஆர்மோ (Armo)
இசை: மணிகண்டன் அய்யப்பா
படத்தொகுப்பு: ரோஹித் V.S. வாரியத்
கலை இயக்கம்: கோகுல் தாஸ்
சண்டைப்பயிற்சி: கலை கிங்சன்
ஆடை வடிவமைப்பு: மெல்வி J
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
விஎஃப்எக்ஸ் (VFX): ஐடென்ட் லேப்ஸ் (Ident Labs)
விநியோகம்: ஐகான் சினிமாஸ் (Icon Cinemas)

Get real time updates directly on you device, subscribe now.