’ திரெளபதி 2 ’ விமர்சனம்

நாயகன் ரிச்சர்ட் ரிஷி வீர வல்லாள நட்டி ஆட்சியில் அவரது கருட படையின் தளபதியாக இருக்கிறார்.மகளுடன் வாழ்ந்து வரும் ரிச்சர்ட் ரிஷியின் உறவினர் ஒருவரது நிலம் வக்பு வாரியத்தால் விற்க முடியாமல் போகிறது.அவரது நிலத்தை மீட்டு தர ஊர் மக்களை ரிச்சர்ட் ரிஷி ஒன்று திரட்டுகிறார்.இந்த நிலையில் அப்போது ஊரில் உள்ள பல வருடங்களாக பராமரிக்கப்படாத கோயிலை புதுப்பிக்க வெளிநாட்டில் இருந்து அந்த ஊருக்கு வருகிறார் நாயகி ரக்ஷனா இந்துசூடன்.
அந்த கோயிலை பார்க்க வரும் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதியாக மாறி ரிச்சர்ட் ரிஷியிடம் மன்னிப்பு கேட்பதுடன் 14ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்ல தொடங்குகிறார்.இவர் கூறும் இந்த கதையில் தான் வீர வல்லாள மகாராஜாவான நட்டிநட்ராஜ் ஆட்சியில் தான் அவரது கருட படையின் தளபதியாக ரிச்சர்ட் ரிஷி சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்.இந்த நிலையில் மதுரையை ஆண்டு வரும் சுல்தானின்படைகள் மக்கள் அனைவரையும் மதம் மாற்ற கட்டாயப்படுத்தி பல கொடுமைகளை செய்து வருகின்றனர்.
டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் துக்ளக் என்ற ஆட்சியாளர் தென் தமிழகத்தை கைப்பற்ற இங்கு வருகிறார்.அவரை எதிர்த்து போரிடும் வீர வல்லாள மகாராஜா கொடூரமாக கொல்லப்படுகிறார். மகாராஜாவையும் கருட படை வீரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முற்படும் ரிச்சர்ட் ரிஷி முன் மகாராஜா தோன்றி சில பொறுப்புகளை அளிக்கிறார்.மகாராஜா உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பில் ரிச்சர்ட் ரிஷி தன் மனைவி திரெளபதியை சந்திக்க,மகாராஜா உயிரை காப்பாற்ற தவறியதாக அவரை விட்டு பிரிகிறார் திரெளபதி.வீரவல்லாளமகாராஜா நட்ராஜ் பிறப்பித்த உத்தரவு என்ன அந்த
உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும் ரிச்சர்ட் ரிஷி வெற்றி பெற்றாரா திரெளபதியான நாயகி ரக்ஷனா இந்துசூடனிடம் மீண்டும் இணைந்தாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.
வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி திறமையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் திரெளபதி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
மற்றும் தேவயானி ஷர்மா,நட்டி நட்ராஜ்,ஒய்.ஜி. மகேந்திரன்,பரணி,சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி,சிராக் ஜானி,தினேஷ் லம்பா,கணேஷ் கௌரங்,திவி,ஆகியோர் நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே.சுந்தர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்துக்களுக்கு நடந்த வரலாற்று கொடுமையான சம்பவங்களுடன் கூடிய சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் மோகன் ஜி அவர்களுக்கு பாராட்டுகள்.
‘திரெளபதி 2’ வேகமும்,விறுவிறுப்பும்.