வங்காள விரிகுடா – குறுநில மன்னன் விமர்சனம்

கதையின் நாயகனான குகன் சக்கரவர்த்தியார் எல்லோராலும் அண்ணாச்சி என்று அன்போடு அழைக்கப்படும் தொழில் அதிபர் குடும்ப வாழ்க்கையில் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது அவரது முன்னாள் காதலி கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் போது குகன் சக்கரவர்த்தி அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அவரைக் காப்பாற்றுகிறார்.பின்னர் கொடுமை செய்யும் காதலியின் கணவனை கொன்று அவளை தனி வீட்டில் குடி அமர்த்துகிறார். ஏற்கனவே நண்பனுடைய பள்ளியில் படிக்கும் மகளை திருமணம் செய்தவர். மனைவி நான்கு ஆண்டுகள் கழித்து தான் தாம்பத்தியம் என்று திட்டவட்டமாக கூறி விடுவதால், மன வேதனையில் இருக்கும் அவர் முன்னாள் காதலியுடன் கள்ளத்தனமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வாழ்கிறார்.குகன் சக்ரவர்த்தியால் கொல்லப்பட்ட முன்னாள் காதலியின் கணவன் குகனையும்,அவரது காதலியையும் போனில் தொடர்பு கொண்டு தான் உயிரோடு இருப்பதாக மிரட்டுகிறார்.பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
ஹீரோ,வில்லன்,கதை,திரைக்கதை, வசனம்,பாடல் வரிகள்,பாடல்கள்,இசை, ஒளிப்பதிவு,கலை இயக்கம்,நடனம், சண்டைப் பயிற்சி (தனிநபர்),ஆடைகள், ஸ்டில்ஸ்,ஒப்பனை,பின்னணிப் பாடல், பின்னணி இசை,படத்தொகுப்பு,தயாரிப்பு வடிவமைப்பு,தலைப்பு,சிகை அலங்காரம், வெளிப்புற அமைப்பு மேலாண்மை, தயாரித்து,இயக்கியும் என 21 துறைகளை தனியாக கையாண்டுள்ளார் குகன் சக்கரவர்த்தியார் அவருக்கு பாராட்டுகள்.
மற்றும் பொன்னம்பலம்,அலினா ஷேக், வையாபுரி மற்றும் பலரும் சிறப்பாக அவர்களது பணியை செய்துள்ளனர்.
வங்காள விரிகுடா–குறுநில மன்னன் பார்க்கலாம்.