நாயகன் யுவன் கிருஷ்ணா மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் இவர் உசிலம்பட்டியில் ஒரு கிடா முட்டு சண்டைக்கு தாமதமாக வருகிறார்.அவர் களத்துக்குள் நுழைவதற்கு முன்பே ரிதான் கிருஷ்ணாஸின் கேலி பேச்சுக்கு உள்ளாக கிடா சண்டை மீது அதிகஈடுபாடு உள்ள யுவன் கிருஷ்ணா ரிதான் கிருஷ்ணாஸின் கிடா அணுகுண்டு உடன் தனது கிடா காளியை மோதவிடும்படி சவால் விட கௌரவத்தை தக்க வைக்க ரிதான் கிருஷ்ணாஸ் கிடா சண்டைக்கு ஒத்துக்கொள்கிறார்.யுவன் கிருஷ்ணாவின் கருப்பு ஆடு காளி திமிர்பிடித்த ரிதான் கிருஷ்ணாஸின் சாம்பியனான அனுகுண்டுவை எதிர்கொள்கிறது.பதினேழு கடுமையான சுற்றுகளுக்குப் பிறகு காளி அனுகுண்டுவின் கொம்புகளில் ஒன்றை உடைத்து யுவன் கிருஷ்ணாவிற்கு மதுரையின் ஜாக்கி என்ற பட்டத்தைப் பெற்றுத் தருகிறது.இந்தத் தோல்வியை ஏற்க முடியாத காப்ரா கார்த்தியின் கோபம் கொடூரமாக மாறுகிறது. அவமானத்தை எதிர்கொள்ள முடியாத ரிதான் கிருஷ்ணாஸ் யுவன் கிருஷ்ணாவிற்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட எதிர்பாராத விதமாக ரிதான் கிருஷ்ணாஸின் கிடா அணுகுண்டு இறப்பதற்கு யுவன் கிருஷ்ணா காரணமாகிவிடுகிறார்.யுவன் கிருஷ்ணாவை பழிவாங்க மதுரையில் உள்ள ஒத்தக்கடை ஊரில் கிடா போட்டிக்கு ஏற்பாடு செய்கிறார் ரிதான் கிருஷ்ணாஸ்.அதில் சந்தர்ப்ப வசத்தால் காளிக்கு தோல்வி ஏற்பட, அதனை வெற்றி வெற்ற உரிமையாளர்கள் அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் மனஉளைச்சல் உண்டாகும் யுவன் கிருஷ்னாவுக்கு இதற்கெல்லாம் காரணம் ரிதான் கிருஷ்ணாஸ்தான் என்ற உண்மை தெரிய வருகிறது.இதனால் இருவருக்கும் வெட்டு குத்து வரை வளரும் பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க,மீண்டும் இருவருக்கும் கிடா சண்டை போட்டி வைக்கிறார்கள். கிடாக்களிடையே கடும் போட்டி நடக்கிறது. போட்டியில் கலந்து கொண்டு யுவன் கிருஷ்ணா எப்படி தன் கிடா காளியை மீட்டார் ரிதான் கிருஷ்ணாஸை எப்படி பழி வாங்கினார் அதன் போட்டி பின்னணியில் நடந்த மோதல் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
யுவன் கிருஷ்ணா ஆட்டோ ஒட்டுனர் ராமராக
கிடா காளியின் உரிமையாளராக தன்னுடைய பங்களிப்பை மிக அழுத்தமான முறையில் கொடுத்து நடித்துள்ளார்.
ரிதான் கிருஷ்ணாஸ் காப்ரா கார்த்தியாக வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.
மற்றும் அம்மு அபிராமி,மது சூதனராவ்,சித்தன் மோகன்,சரண்யா ரவி, பாத்மன்,யோகி,சாய் தினேஷ்,சிதம்பரம், பிரவீன்,ஆதவ்,ஈஷா உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்து அசத்தியுள்ளனர்.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும்,சக்தி பாலாஜியின் இசையும் படத்திற்கு அதிக பலம் சேர்த்துள்ளது.
உணர்ச்சிகளின் ஆழம் பெருமை வன்முறை கலந்த திரைக்கதையாக உருவாக்கி வித்தியாசமான முயற்சியுடன் இயக்கி இருக்கும் இயக்குநர் டாக்டர் பிரகாபால் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஜாக்கி அழியாத அரியாத பராம்பரியம்.
