டிராவிட் செல்வம்,அஞ்சலி நாயர்,தீபக் மூவரும் கல்லூரியில் இருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டதால் தங்க இடம் இன்றி பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் தங்குகின்றனர்.அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால் ட்ரோன் மூலம் அவர்கள் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது ஏஞ்சல் சித்தி இத்னானியை கண்டு காதல் கொள்கிறார் டிராவிட் செல்வம் இந்த காதலை பாட்டியான சூனியக்காரக் தேவதர்ஷினி எதிர்க்கிறார். அத்துடன் அம்மூவரையும் தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார் தேவதர்ஷினி.இதற்கிடையில் நகரில் மர்ம கொலைகள் நடக்கின்றன.அதை துப்பறியும் சாம்புவாக இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ் தனக்கு ஒரு காதலி அமையவில்லை என்ற ஏக்கத்தில் புலம்பிக்கொண்டே துப்பறிய முயல்கிறார்.சூனியக்கார கிழவியிடம் சிக்கிய நண்பர்கள் என்ன ஆனார்கள் நகரில் நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் என்பதே படத்தின் மீதிக்கதை.
டிராவிட் செல்வம் நடனம் நடிப்பு நகைச்சுவை என அனைத்திலும் கவனம் செலுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
தேவதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி சிறப்பான தேவதையாகவே தோன்றி நடித்துள்ளார்.
மற்றும் அஞ்சலி நாயர்,தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ்,குரேஷி,ஆர் ஜே தீபக்,சசி செல்வராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
ஹரி எஸ்.ஆர்.இசையும்,ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு சிறந்த வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதற்கு ஏற்றது போல சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து உச்சக்கட்ட காட்சிவரை படத்தை விறுவிறுப்பும் கலகலப்பும் மாய தந்திரங்கள் என வணிக ரீதியாக இயக்கி இருக்கும் இயக்குனர் ஆர்.ராகவ் மிர்தாத் அவர்களுக்கு பாராட்டுகள்.
“ட்ரோன்ஸ்” அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
Get real time updates directly on you device, subscribe now.