பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படம் லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக திரைக்கு வந்துள்ளது.
முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் டொவினோ தாமஸ் தன் மீதான அவப்பெயரை போக்கும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார்.
இதற்காக அக்கட்சியின் தலைவரான அபிமன்யு சிங்குடன் கைகோர்க்கிறார்.
இதற்கு அவரின் சகோதரி மஞ்சு வாரியர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்.
இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும்,கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறது.
இப்படியான சூழலில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் மோகன்லால், பத்திரிகையாளர் இந்திரஜித் முயற்சியால் மீண்டும் களம் இறங்குகிறார்.ஹீரோவால் தனது மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா அபிமன்யு சிங் உடனான அவருக்கு என்ன பகை அபிமன்யு சிங்கிற்கும் பிருத்விராஜுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிக்கதை.
மோகன்லால் ஸ்டீபன் நெடும்பள்ளி மற்றும் அப்ராம் குரேஷி ஆகிய இரு வேடங்களில் தோன்றி தனது அசத்தலான தோற்றத்தாலும் நடிப்பாலும் அனைவரையும் கவர்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது.
பிருத்விராஜ் சுகுமாரனுக்கு குறைந்த நேரமே வந்தாலும் அவரது பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
டோவினோ தாமஸ் அவரது கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறார்.
மஞ்சு வாரியர் தனது நடிப்பால் ஈர்க்கப்படுகிறார்.
அபிமன்யு சிங் சிறப்பாக நடித்துள்ளார்,
மேலும் வெளிநாட்டு மற்றும் அனைத்து துணை நடிகர்கள் தங்களது பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளனர்.
தீபக் தேவின் இசையும்,சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் படத்திற்கான மிக பெரிய பலம்.
இயக்குனர் பிருத்விராஜ் சுகுமார் ஒரு நடிகராக பல்வேறு படங்களின் மூலம் தனது திறமையை நிரூபித்து உள்ளார் அதே போன்று இயக்குநராகவும் தனது திறமையை மீன்டும் நிரூபித்துள்ளார் வாழ்த்துகள்,பாராட்டுகள்.
‘எல் 2:எம்புரான்’ உணர்வுப்பூர்வமான அதிரடி ஆக்ஷன்.
