தி டோர் விமர்சனம்

ஆர்கிடெக்ட் ஆக பணியாற்றும் பாவனா தான் வடிவமைத்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக அங்கு இருக்கும் ஒரு பழமையான சின்ன கோவில் ஒன்றை இடிக்க நேரிடுகிறது அதை இடிக்கும் அதே நேரத்தில் ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் பாவனாவின் தந்தை வானத்திலிருந்து ஒரு பனித்துளி விழுந்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.
தந்தையின் மரணம் பாவனாவை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது.மன உளைச்சலில் இருக்கும் பாவனா ஆர்கிடெக்ட் பணியில் இருந்து விலக முடிவெடுக்கிறார்.
சில நாட்கள் கழித்து கட்டிடக்கலை உரிமையாளரும் பாவனாவின் குடும்ப நண்பருமான ஜெயபிரகாஷ் மித்ராவுக்கு ஆறுதல் கூறி,அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணியை மீண்டும் தொடங்கி முடித்து தர வேண்டும் என்று கேட்கிறார். பிறகு மீண்டும் தன் பணியை தொடங்க ஊருக்கு வந்து அங்கு இன்னொரு பெண்ணுடன் வீட்டில் தங்கி இருக்கிறார்.பாவனா தன் பணியை தொடங்கும் போது,அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் சிறு சிறு விபத்துகள் நடக்கிறது.அவர் கண்களுக்கு அவ்வப்போது ஒரு பெண்ணின் உருவம் தென்பட்டு மறைகிறது.அதே சமயம் வீட்டில் தன் தோழி தூக்கத்தில் எழுந்து நடப்பது, சுவற்றில் முட்டி தன்னைக் காயப்படுத்திக் கொள்வது என்று வினோதமாக நடந்து கொள்கிறார்.தனது நண்பர்களின் உதவியுடன் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும்,அது பாவனாவிடம் ஏதோ ஒரு உதவியை நாடுவதாகவும் சொல்கிறார். ஆனால் பாவனா பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். இருப்பினும் அந்த அமானுஷ்ய சக்திக்கும்,தனக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆராய்கிறார். அப்போது அவர் சந்திக்கும் நபர்கள் எல்லாம் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.அந்த மர்ம உருவத்திற்கும், பாவனாவுக்கும் மற்றும் அவரது தந்தைக்கும் என்ன தொடர்பு புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் மர்ம மரணங்களுக்கு என்ன தொடர்பு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு,பாவனா திரையில் தோன்றி தனது திறமையான நடிப்பை பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் கணேஷ் வெங்கட்ராம், ஜெயப்பிரகாஷ்,ஸ்ரீரஞ்சனி,நந்தகுமார், கிரிஷ்,பாண்டி ரவி,சங்கீதா,சிந்தூரி, பிரியா வெங்கட்,ரமேஷ் ஆறுமுகம்,கபில், பைரி வினு,ரோஷினி,சித்திக்,வினோலியா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
வருண் உன்னின் இசையும்,ஒளிப்பதிவாளர் கௌதம் ஜி அவர்களின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பாளர் அதுல் விஜயின் படத்தொகுப்பும் அருமை படத்திற்கு பலம்.
விறுவிறுப்பான காட்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் காட்சி படுத்தி உள்ள இயக்குனர் ஜெய்தேவ் அவர்களுக்கு பாராட்டுகள்.
தி டோர் சுவாரஸ்யமான,சஸ்பென்ஸ் நிறைந்த திகில்.