“என்ன விலை” விமர்சனம்

மீனவரான கருணாஸ் ராமேஸ்வரம் கடலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வீசி எறியும் காணிக்கை காசுகளை கடலில் மூழ்கி எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஒருநாள் அப்படி கடலில் வீசி எறிந்த காசுகளை கருணாஸ் கடலில் மூழ்கி எடுக்கும்போது அவரது கையில் ஒரு பதக்கம் சிக்குகிறது.அந்த பதக்கத்தை கடற்கரை காவலரிடம் கொடுக்கிறார்.அந்த பதக்கத்தில் பதிக்கப்பட்ட கல்லில் ஒரு நீலநிற கல்லை மட்டும் கருணாசுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு, அந்த பதக்கத்தை கருணாசிடமே திருப்பி கொடுத்து விடுகிறார்.மறுநாள் அந்தப் பதக்கத்தை கருணாஸ் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்களிடம் கொடுத்து விடுகிறார்.அந்த பதக்கம் நூற்றாண்டை கடந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்று தெரியவருகிறது.இதற்கிடையே காவலர் திருடிய நீலநிறக்கல்லை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று மூன்று காவலர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் அந்த பதக்கம் சமூக ஊடகங்களில் வெளியாகிவிடுகிறது. தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த மூன்று காவலர்களும் அந்த பதக்கத்தை கோவலிலிருந்து கருணாஸ் திருடியதாகவும் அதை மீட்டு காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் திருடிய கருணாசை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும் மேலதிகாரியிடம் அந்த காவலர்கள் கூறுகிறார்கள்.தீவிர விசாரணையில் கருணாஸ் நிரபராதி என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது. ஆனால் “நிரபராதியான என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால் எனது மானம் போய்விட்டது.எனக்கு நஷ்ட்ட ஈடாக பணம் தேவையில்லை.ஆனால் இழந்த என் மானத்துக்கு என்ன விலை என்று நீதிபதியிடம் கருணாஸ் கேட்கிறார் அதற்கு நீதிபதியின் தீர்ப்பு என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கருணாஸ் தன் உடல் மொழியால் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கறிஞராக நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன்,பூர்ணிமா பாக்யராஜ்,நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,கமலேஷ் ஜெகன்,லொள்ளு சபா,சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ்.இசையும்,ஆல்பா ஆண்டனி ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு சிறந்த கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் சஞ்சீவ் பழவூர் அவர்களுக்கு பாராட்டுகள்.
“என்ன விலை”ஒவ்வொரு மனிதனின் தன்மானத்துக்கு என்ன விலை என்பதை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது.