“எதற்கும் துணிந்தவன்”விமர்சனம்


பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் “எதற்கும் துணிந்தவன்”
“கண்ணபிரான்”என்ற வக்கீலாக சூர்யா ஏற்றிருக்கும் இந்த வேடம் சூரரைப்போற்று படத்திலும் ஜெய்பீம் படத்திலும்இல்லாத அளவுக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது சூர்யாவின் வேடம்.
வாழ்க்கையில் பெரிய அளவில் வளர வேண்டும் என்ற பல இளைஞர்களின் கனவை “சூரரைப்போற்று” திரைப்படத்திலும் இருளர் இன மக்களின் வாழ்வுக்காக ஆதரவுக்காக போராடும் வக்கீலாக “ஜெய்பீம்” திரைப்படத்திலும் நடித்திருந்த சூர்யாவுக்கு இந்த “எதற்கும் துணிந்தவன்” படத்தின் மூலம் அனைத்து பெண்களின் ஆதரவும்,வரவேற்பும் கிடைக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.
ஆதினி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இரண்டாவது படத்திலும் நம் மனதை கொள்ளையடிக்கிறார் பிரியங்கா மோகன் .
ஒருகட்டத்தில் அவர் நிச்சயமாக தற்கொலை செய்துகொள்வார் என்று படம் பார்க்கும் அத்தனை பேரும் நினைக்கையில் அந்த முடிவை மாற்றி அப்படியே வேறு ஒரு முடிவை கொண்டுவரும் தைரியம் இயக்குனரின் திரைக்கதையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இயக்குனர் பாண்டிராஜ்க்கு ஒரு சல்யூட்.
சூர்யாவின் அப்பாவாக சத்யராஜ் ஆதிராயர்  என்ற கதாபாத்திரத்திலும் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்  கோசலை என்ற கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகின்றனர்.அதிலும் அம்மா, மகன் காட்சிகள் ஒரு குடும்பத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கின்றன.காமெடி என்று சூரியும் ‘விஜய் டிவி’ புகழும் வந்து செல்கின்றனர்.
இந்த படத்துல அடுத்ததா சொல்லணும்னா படத்தில் இன்னொரு ஹீரோவே இவர்தான் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் சூப்பரா நடிச்சு இருக்காரு நம்ம வினய்.வினய் நடித்த நிறைய படங்களில் குற்றச்சாட்டுகள் இருக்கும்.அவருடைய டயலாக் டெலிவரி சரியில்ல ஆக்டிங் சரியில்ல ஃபேஸ் ரியாக்ஷன் சரியில்ல நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு ஆனா இந்த படத்துல நிச்சயமா இந்த குற்றச்சாட்டுகள் சொல்பவர்கள் அனைவருக்குமே  ரொம்ப பிடிக்கும் சும்மா மிரட்டலா நடிச்சிருக்கார் வினய்.அவருக்கும் ஒரு வாழ்த்துக்கள்.
அடுத்தது படத்தோட இசையமைப்பாளர் டி இமான் பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமானது எல்லாத்துக்கும் தெரியும்.பின்னணி இசையில் இமான் சூர்யாவுக்கு என்ன தேவையோ கதைக்கு என்ன தேவையோ புகுந்து விளையாடி இருக்கிறார்.
படத்தோட கதை ஒரு சாதாரண கதை தான் இரண்டு ஊருக்கும் சண்டை இந்த ஊரில் இருந்து அந்த ஊர்ல பொண்ணு கொடுக்க மாட்டோம் பொண்ணு எடுக்கமாட்டோம் அப்படின்னு  ஒரு இரண்டு வருஷமா வாழ்ந்து இருக்க ஊருக்கு நடுவுல ரெண்டு ஊரில்  உள்ள இளைஞர்களால்  என்ன பிரச்சனை ஆகுது ஏன் ரெண்டு ஊருக்கும் விரோதம் வந்தது, ஒரு குறிப்பிட்ட ஊரு பெண்களை மட்டும் ஏன்  அசிங்கப்படுத்தனும். என்ற கேள்விக்கு எல்லாம் பதில் தான் படத்தோட கதை.
முதல்ல இந்த படத்தோட இயக்குனர் பாண்டிராஜுக்கு ஒரு வாழ்த்து சொல்லணும் ஏன்னு கேட்டீங்கன்னா “கடைக்குட்டி சிங்கம்” “நம்ம வீட்டு பிள்ளை” ரெண்டுமே குடும்ப பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பார்.
இந்த படமும் அதே போல இருக்குமோ அப்டின்னு நினைச்சு தியேட்டருக்கு போனா ஒரு இன்ப அதிர்ச்சிதான் கொடுத்திருக்கிறார் என்று சொல்லணும் .பாண்டிராஜ் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான படம் இந்த “எதற்கும் துணிந்தவன்”.
வயசு பெண்களுக்குஏற்ற படம்.
எதற்கும் துணிந்து தான் இருப்பாங்க என்பது சந்தேகமே இல்லை.
பெண்ணைப் பெற்றவர்களுக்கும் இப்படம் நிச்சயமாக ஒரு தைரியத்தை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.மொத்தத்தில் இந்த “எதற்கும் துணிந்தவன்” படத்தை துணிந்து அனைவரும் திரையில் கண்டு களிக்கலாம்.