“கிளாப்” திரை விமர்சனம்


“கிளாப்” திரை விமர்சனம்

படத்தின் நாயகனாக ஆதி தன் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கால் ஊனமுற்ற நபராக நடித்து இருக்கிறார். அதுவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தன்னால் முடியாத கனவையும், லட்சியத்தையும் யாரும் இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பெண்ணை அவள் கண்ட கனவையும் லட்சியத்தையும் தன் நாட்டிற்காக தங்கம் வெல்ல வைப்பதே கதாநாயகனின் நோக்கம்.
அதில் வெற்றியும் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சும் நிச்சயமாக ஆறுதலாக இருக்கும்.
தான் ஜெயித்தால் தான் வெற்றியா தான் நினைக்கும் லட்சியத்தையும் கனவையும் யார் ஜெயித்தாலும் அதன் வெற்றிக்குப் பின்னால் நாம் இருந்தால் போதும் என்ற உயர்ந்த எண்ணம் உடயவர்தான் ஆதி.
“கிளாப்” திரைப்படம் சமூக நீதிக்கும் அதன் ஒடுக்கு முறைக்கும் உள்ள போராட்டத்தை விவரிக்கும் படம் இளம் வயதில் இனம் கண்டு அடித்து தூள் கிளப்பிருக்கிறார் இயக்குனர் பிருத்வி. இது போன்ற படங்களை அனைவரும் வரவேற்று ஊக்கம் தரவேண்டும்.
முடியும் வரை முயற்சி செய் …
உன்னால் முடியும் வரை அல்ல …
நீ நினைத்தது முடியும் வரை….

மொத்தத்தில் இந்த “கிளாப்” அனைவரும் “கிளாப்” பண்ணவேன்டிய திரைப்படம்