நாயகன் ஏகன் தான் படிக்கும் கல்லூரியிலிருந்து ஒரு சில காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டு வேரொரு கல்லூரியில் சேர்கிறார்.அதே கல்லூரியில் படித்துவரும் ஶ்ரீதேவி அப்பாலாவுக்கும் ஏகனுக்கும் காதல் ஏற்படுகிறது.ஆனால் காதலியின் அப்பா சாதிவெறி பிடித்தவராக இருப்பதால் வேரொருவனுக்கு ஶ்ரீதேவி அப்பாலாவை திருமணம் செய்து வைக்கிறார்.இதனால் விரக்தியடைந்த ஏகன் ஒரு தொழில்நுட்ப அலுவலகத்தில் குழுத்தலைவராக வேலை பார்க்கிறார்.அந்த குழுமத்தில் பெமினா ஜார்ஜிக்கு வேலை கிடைக்கிறது.அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒருவரை பெமினா காதலிக்கிறாள்.பிறகு அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்படுகிறது. இறுதியில் ஏகனும் பெமினாவும் காதலிக்கிறார்கள்.ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவி அப்பாலாவின் நினைவாகவே தன்னுடன் பழகுகிறான் என்பது பெமினாவுக்கு தெரிய வருகிறது. ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவியின் நினைவாகத்தான் தன்னை பார்க்கிறான் என்பதை புரிந்துகொண்ட பெமினா ஏகனுடனான காதலை முறித்துக் கொள்கிறாள்.அதன் பிறகு முடிவு என்ன என்பதுதே படத்தின் மீதிக்கதை.
ஏகன் தனது கதாபாத்திர்த்தை நன்கு உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் ஶ்ரீதேவி அப்பாலா,பெமினாஜார்ஜ், அதிர்ச்சி அருண்,சுப்ரமணிய சேது, அதியமான்,மைம் கோபி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்துகுமாரின் இசையும் பிரயேஷ் குமாரின் ஒளிப்பதிவும் கதைக்கு பெரிய பலம்.
இப்படி ஒரு சிறப்பான கதையை கையில் எடுத்து அதை ஒரு காவியக் கவிதையாக சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி அவர்களுக்கு பாராட்டுகள்.
ஹைக்கூ காவியக் கவிதை.
Get real time updates directly on you device, subscribe now.
Prev Post