kollywood news

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!*

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திரையுலக ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்ற ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தையும், ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.

புதிய படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான அனுபவம். ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு எனக்கு முழுப் படப்பிடிப்பிலும் ஊக்கமளித்தது. நாசர் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

 

 

ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “விஷால் வெங்கட் மிகச்சிறந்த இயக்குநர். அவரது ஐடியா எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். கதை விவாதம் தொடங்கி தயாரிப்பு மற்றும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். நாங்கள் அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ணந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் எங்களது பயணம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் இந்தத் துறையின் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது.

முன்தயாரிப்புப் பணிகளின்போது சொன்னபடியே இயக்குநர் விஷால் வெங்கட் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இப்படமும் மற்றுமொரு பெருமைமிக்க படைப்பாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர்.

 

 

 

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

கதை: ஹரிஹரன் ராஜு,
இசையமைப்பாளர்: ஹேஷம் அப்துல் வஹாப்,
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.,
படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே.,
கலை இயக்கம்: மனோஜ் குமார் கே.,
வசனங்கள்: ஆஷாமீரா ஐயப்பன்,
தலைமைச் செயல் தயாரிப்பாளர்கள்: ஏ. ஜெய் சம்பத், தினேஷ் நரசிம்மன்,
இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி,
ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா,
விளம்பர வடிவமைப்பு: வியாகி

Get real time updates directly on you device, subscribe now.