அரசியல்வாதி மற்றும் பெரிய ரவுடியான மைம்கோபி தன் எதிரியை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்க நினைக்கிறார்.தன் அம்மாவின் சாவிற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் வலம் வருகிறார் ரவுடி கேபி.ஒய் தீனா.தன் தம்பியை நன்றாக படிக்க வைத்து கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வரும் ரவுடி அனிஷ் மாசிலாமணி. இவரின் தம்பிக்கு அண்ணன் போல் ரவுடியாக கெத்தாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. உள்ளூர் ரவுடிகள் மத்தியில் மர்மமான கொலைகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் சதி வேலைகள் நடக்கிறது. அனிஷ் மாசிலாமணி மற்றும் கேபி.ஒய் தீனா ஆகியோர் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். துரோகங்களும் பழிவாங்கலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, கிரிமினல் பாதாள உலகில் உள்ள வாழ்க்கையின் சிக்கல்களையும் சாதாரண நபர்கள் அசாதாரண சூழ்நிலைகளில் எவ்வாறு சிக்குகிறார்கள் என்பதைச் சுற்றி பயணிப்பதே கதைக்களமாக ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
மைம் கோபி,அனிஷ் மாசிலாமணி,கேபி.ஒய் தீனா ஆகிய மூவரும் சேர்ந்து கதைக்கு வலுவான கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
மற்றும் ராமச்சந்திர துரைராஜ், கலையரசன்,சித்ராசேனன்,சித்து குமரேசன் ஆகியோர் சிறப்பான முறையில் நடித்து கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
இசையமைப்பாளர் டுமே அவர்களின் பின்னணி இசையும்,ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
திரைக்கதையில் நிறைய ட்விஸ்ட்டுகளை கையாண்டு ஒரே இரவில் நடப்பது போன்று காட்சி அமைத்து அனைவருக்கும் ஏற்றவாறு படத்தை தந்திருக்கும் இயக்குனர் ஹரி வெங்கடேஷீக்கு பாராட்டுக்கள்.
ஃப்ரைடே வித்தியாசம் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.
