ஐபிஎல் விமர்சனம்

கிஷோர் கேப் டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் சக ஊழியருக்கு உதவப் போக வேலையை இழக்கிறார்.அவரது மனைவி அபிராமி தன் நகைகளை அடமானம் வைத்து சொந்தமாக கார் வாங்க உதவ வாழ்க்கை நன்றாக செல்கிறது. இதனிடையே கிஷோர் ஒரு விபத்தில் சிக்கி காலில் அடிபட இதனால் அவரால் கார் ஓட்ட முடியாமல் போகிறது இதனால் தனது காரை வாடகைக்கு விடுகிறார்.அந்த வாடகை கார் ஒட்டுனரால் கிஷோர் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார். அவரது வாகனம் அரசியல் அதிகார சூழ்ச்சியுடன் ஒரு ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரியால் மோசமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பொய் புகார் கொடுக்கப்பட அவரது அமைதியான வாழ்க்கை ஒரே இரவில் வீழ்ச்சியடைகிறது.எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்டு,குற்றத்தை ஒப்பக்கொள்ள சொல்லும் அரசியல் அழுத்தம் மற்றும் போலீஸ் அராஜகத்திற்கு இடையில் சிக்கி,கிஷோர் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் தள்ளப்படுகிறார்.கிஷோரின் தங்கையை காதலிக்கும் டிடிஎஃப் வாசன் அப்பாவியான கிஷோரை காப்பாற்ற பல முயற்சிகள மேற்கொள்கிறார். இந்நிலையில்,மேலிடத்து அழுத்தத்தால் கிஷோரையும் அவரின் குடும்பத்தினரையும் துன்புறுத்தும் போது,வேறுவழியின்றி செய்யாத குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு கையெழுத்திடுகிறார். பின் நீதிமன்றம் கொண்டு செல்லும் கிஷோரை வாசன் தலையிட்டு எப்படி விடுவிக்க போராடினார் சட்டத்தை பயன்படுத்தி கிஷோர் இதனை சாதித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
குணசேகரனாக கிஷோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் டிடிஎஃப் வாசன்,போஸ் வெங்கட், சிங்கம்புலி,ஆடுகளம் நரேன்,அபிராமி, குஷிதா கல்லாப்பு,திலீபன்,ஜான் விஜய், ஹரீஷ் பெராடி,ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையும்,ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சுமணி அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு வலுசேர்த்துள்ளன.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் லாக்அப் மரணங்கள்,மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அதிர்ச்சி இவைகளை சேர்த்து சிறந்த திரைக்கதை அமைத்து அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இயக்கிய இயக்குனர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டுகள்.
ஐபிஎல் அநீதிக்கு எதிரான போராட்டம்.