ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

 

 

ஆந்திராவில் மிகப்பெரிய தாதுவான அஜய் கோஷ் தனது உறவினர்களை கொன்ற பாண்டிச்சேரி தாதாவான சூப்பர் சுப்பராயனை பழி தீர்த்தால் பல கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்க பாண்டிச்சேரி லோக்கல் தாதாக்களான கல்யாண் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த பரிசை வாங்க நினைத்து சூப்பர் சுப்பராயனை கொல்ல திட்டமிடுகிறார்கள்.இவர்கள் திட்டம் தீட்டி பாண்டிச்சேரியிலுள்ள விலைமாதுவின் வீட்டிற்கு சூப்பர் சுப்பராயனை வர சொல்கின்றனர்.இந்நிலையில் பாண்டிச்சேரியில் பல வருடங்களுக்கு முன்பு நில மோசடியில் ஏமாந்து பல கோடிகளை இழந்து தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி ராதிகா மகள் கீர்த்தி சுரேஷ் திருமணமான மூத்த பெண் காயத்ரி ஷான் மற்றும் இளைய மகள் அக்ஷதா அஜித் ஆகியோருடன் குடும்பமாக வாழ்கின்றனர். ஒரு நாள், கீர்த்தி சுரேஷின் சகோதரி மகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட அவரது குடும்பம் தயாராகும் போது, போதையில் இருக்கும் சூப்பர் சுப்ராயன் வழி தவறி கீர்த்தி சுரேஷின் வீட்டிற்குள் வந்து ரகளை செய்ய,பெரிய வாய் தகராறு கைகலப்பில் முடிந்து ராதிகா தற்செயலாக சூப்பர் சுப்ராயனை கொன்றுவிடுகிறார். பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்கள் வருவதால்,கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பத்தினரும் தாதா உடலை மறைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.காணாமல் போன சூப்பர் சுப்ராயனை மகன் சுனில்அடியாட்கள் உதவியுடன் தேடுகிறார்.லோக்கல் தாதாக்கள் தங்கள் பங்கிற்கு சூப்பர் சுப்ராயனனின் உடலை கைப்பற்ற நினைக்கின்றனர். இவர்களின் தேடுதல் வேட்டைக்கு நடுவே கீர்த்தி சுரேஷை பழி வாங்க நினைக்கும் லோக்கல் இன்ஸ்பெக்டர் ஜான் பாண்டியன் வேறு இன்னோருபுறம் துரத்துகிறார். இந்த சம்பவம் அங்கே குண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே உள்ளுர் கும்பல் சண்டையாக மாறுகிறது இந்த சண்டையின் காரணமாக கீர்த்தி சுரேஷின் குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறது. இவர்களிடமிருந்து கீர்த்தி தன் குடும்பத்தை காப்பாற்றினாரா கீர்த்தியிடம் கிடைக்கும் துப்பாக்கியை வைத்து அனைவரையும் என்ன செய்தார் இறந்த சூப்பர் சுப்ராயனனின் உடலை கண்டுபிடித்தார்களா இறுதியில் யாரிடம் உடல் கிடைத்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம்பிடிக்கிறார்.

மற்றும் ராதிகா சரத்குமார்,ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி,சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ்,கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி,கதிரவன்,சென்ட்ராயன், அகஸ்டின்,பிளேடு சங்கர்,ராமச்சந்திரன், அக்ஷதா அஜித்,குஹாசினி,காயத்ரி ஷான் ஆகியோர் சிறந்த முறையில் தங்களது பணிகளை செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
பொழுதுபோக்கு படமாக சிறந்த திரைக்கதை அமைத்து நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ள இயக்குனர் ஜே.கே.சந்துரு அவர்களுக்கு பாராட்டுகள்.
ரிவால்வர் ரீட்டா காமடி த்ரில்லர்.