ரஜினி கேங் விமர்சனம்

நாயகன் ரஜினி கீஷன் தனது காதலி திவிகாவுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். திவிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் மாமா கூல் சுரேஷ். இவர்களின் ஒடிப்போகும் திட்டத்தை தடுக்க முயற்சிக்கும் கூல் சுரேஷை ஏமாற்றி முனீஷ்காந்த்தின் காரில் ஏரி தப்பிக்கின்றனர் இதே காரில் வழியில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கல்கி லிப்ட் கேட்டு ஏரி பயணிக்கின்றார் கூல்சுரேஷின் ஆட்கள் துரத்துவதால் கல்கி திருடிவைத்திருக்கும் தாலியை வாங்கி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுகின்றார் முனீஷ்காந்த்.ரஜினி திவிகாவிற்கு கட்டும் தாலியில் ஒரு பேய் மறைந்து இருக்கிறது.பேய் தாலியில் ஒரு சோகமான கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமல் திவிகா விசித்திரமான,ஆக்ரோஷமான நடத்தையைக் காட்டத் தொடங்கும் போது அவர்களின் திருமணம் ஒரு குழப்பமான திருப்பத்தை எடுக்கிறது. இறுதியில் நீண்ட காலமாக புதைக்கப்பட்ட துன்பத்திற்கு நீதி தேடும் பொன்னரசியின் ஆவி என்பதை கண்டுபிடிக்கிறார் ரஜினிகீஷன். திவிகாவைக் காப்பாற்ற,ரஜினிகீஷன் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஒரு பாதிரியாருடன் இணைந்து, சபிக்கப்பட்ட தாலியின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டுபிடித்து, பொன்னரசியின் கதையுடன் பிணைக்கப்பட்ட பேய்களை எதிர்கொண்டு மனைவி திவிகாவை மீட்டாரா, கூல்சுரேஷ் என்னவானார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஜினிகீஷன் தான் விரும்பும் பெண்ணைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு ஆணின் உறுதியான மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் திவிகா,முனிஷ்காந்த்,மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ்,கல்கி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து உள்ளனர்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் அவர்களின் இசையும்,ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
காதல்,உணர்ச்சி மற்றும் திகில்,நகைச்சுவை கலந்த கதையில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய திரைக்கதையாக சஸ்பென்ஸ் கலந்து கொடுத்துள்ள இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி அவர்களுக்கு பாராட்டுகள்.
ரஜினி கேங் சிறப்பான கேங்