“கிராணி” விமர்சனம்

ஆனந்த்நாக் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தன் சொந்த கிராமத்திலிருக்கும் தங்களது பூர்வீக பங்களாவில் குடியேறி விவசாயம் பார்க்க வருகிறார்கள்.ஆனந்த்நாக் லண்டனில் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்து வந்தவர்.இவர்கள் நால்வரும் அந்த பங்களாவுக்குள் நுழைந்ததும் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார்கள்.அந்த அமானுஷிய சக்திக்குப் பின்புலமாக இருப்பது பல ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தில் வாழ்ந்த வந்த ஒரு மந்திரவாதி என்றென்றும் இவன் எப்பொழுதும் இளமையாக இருக்க 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூவில் கசாயம் செய்து குடித்து,அதோடு மட்டுமல்லாமல் இளம்குழந்தையின் பச்சை இதயத்தை கடித்து தின்று வயோதிகத்திலும் இளமையாக மாறி வாழ்ந்து வருகிறான். நாளடைவில் இந்த உண்மை ஊர்மக்களுக்கு தெரியவர ஊர்மக்கள் அந்த மந்திரவாதியை தீவைத்து எரித்து கொன்றுவிடுகிறார்கள். அந்த மந்திரவாதி செய்த அதே வேலையை அவனின் மனைவி வடிவுக்கரசியும் செய்து என்றென்றும் இளமையாக இருக்க பூவின் கசாயமும் குழந்தைகளின் இதயத்தையும் தின்று இளமையாக மாற அந்த பங்களாவுக்குள் மறைந்து வாழ்கிறாள். அந்த பங்களாவுக்குதான் ஆனந்த்நாக் தன் குடும்பத்பினருடன் வருகிறார்.இவர்கள் மந்திரவாதி வடிவுக்கரசியிடமிருந்து தப்பித்தார்களா,அதே பங்களாவுக்குள் துப்பறிய வந்த காவல் ஆய்வாளர் திலீபனும் காவலர் சிங்கம்புலியும் கிழவி வடிவுக்கரசியிடமிருந்து தப்பித்தார்களா,இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
வடிவுக்கரசி அனைவரையும் பயமுறுத்தும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் திலீப்ன்,சிங்கம்புலி,கஜராஜா, ஆனந்த்நாக்,அபர்ணா,குழந்தை நடசத்திரங்களான ஞானஷியாம்,சண்ட்ரியா ஆகியோர் அவர்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் செல்லையா பாண்டியனின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
த்ரிங்கான திரைக்கதை அமைத்து கதைக்கு இரண்டாம் பாகத்திற்கான லீட் அமைத்து சஸ்பென்ஸாக முடித்து சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய் குமரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“கிராணி” சஸ்பென்ஸ் த்ரில்லர்.