கதையின் நாயகனான கிஷோர்குமார் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார்.அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார் அவரது மனைவி சுபத்ரா.இவர்களின் மகன் ஹரிஸ் உத்தமன் தொழில்நுட்பத்துறை குழுமத்தில் பணியாற்றுகிறார்.மகள் தனன்யா வர்ஷினி வேலையின்றி வீட்டில் இருக்கிறார். இயற்கையாகவே பாடும் திறன் கொண்ட கிஷோர் குமாரை தொலைக்காட்சியில் பாடவேண்டுமென்று அவரது மகள் விரும்புகிறாள்.மகளின் விருப்பத்திற்கேற்ப தொலைக்காட்சியில் பாட ஆரம்பிக்கிறார் கிஷோர்.அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே கூடுகிறது. தொடர்ந்து தொலக்காட்சியில் போட்டிப் பாடல் பாடுவதால் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கிறார். இதனால் உடற்பயிற்சி ஆசிரியர் வேலையை இழக்கநேரிடுகிறது. தொலைக்காட்சி போட்டி பாடலிலும் தோல்வியடைகிறார்.இதனால் விரக்தியடைந்த கிஷோர் மதுவுக்கு அடிமையாகி கடனாளியாகவும் ஆகிவிடுகிறார்.இந்த நிலையிலிருந்து அவர் மீண்டாரா இல்லையா என்பதுதே படத்தின் மீதிக்கதை கதை.
கிஷோர்குமார் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தத்ரூபமாக நடித்து அனைவரது பாராட்டுதலையும் பெறுகிறார்.
மற்றும் சுபத்ரா ராபர்ட்,ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன்,தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் ஆகியோர் தங்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர்.
சங்கர் ரங்கராஜனின் இசையும்,தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு மென்மையான குடும்பபாங்கான கதைக்கு சிறந்த திரைக்கதை அமைத்து தயாரித்து,இயக்கி இருக்கும் இயக்குனர் திரவ் அவர்களுக்கு பாராட்டுகள்.
“மெல்லிசை” மென்மை.
