
இன்டீரியர் டிசைனரான ஹன்சிகா மோத்வானி சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்கிற அவப்பெயருடன் வளருகிறார். ஒரு கட்டத்தில் இவர் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். பல முறை இன்டர்வியூவில் திறமையாக பதில் கூறியும் தோல்வியையே சந்திக்கிறார். இந்நிலையில் ஒரு இன்டர்வியூவில் சரியாக அவர் பதில் சொல்ல முடியாத நிலை இருந்ததும் அவருக்கு அங்கே வேலை கிடைக்கிறது அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடப்பதுடன், அவர் நினைப்பது எல்லாம் நன்றாகவே நடக்கிறது. கூடவே சில கெட்டதும் நடைபெற்று பல துரதிஷ்ட சம்பங்களும் நடக்கின்றது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. மேலும் நல்லது செய்யும் இந்த ஆவியின் உதவி யிலிருந்து விடுபட அவர் முயற்சிக்கும் போது, அந்த ஆவியின் நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களால் சிலரைப் பழி வாங்க வேண்டும் என அவரிடம் கூறுகிறது. ஆவியின் கதையை அறிந்து கொண்ட பிறகு ஹன்சிகா அந்த ஆவிக்கு உதவி செய்ய சம்மதிக்கிறார். அதன் பின் நடப்பதுதான் படத்தின் மீதிக்கதை.ஹன்சிகா அழகான பேயாக தன் திறமை முழுவதையும் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.ஏனைய மற்ற கலைஞர்களான பிரதீப் ராமன்,சுரேஷ்மேனன்,ஸ்ரீமன்,ஶ்ரீராம்பார்த்தசாரதி,மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன்தங்கத்துரை,அபிஷேக் வினோத்,சோபனா பிரனேஷ்,தியா ஆகியோர்களும் அவர்களது பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.K.A.சக்திவேலின் ஒளிப்பதிவும், சாம்C.Sன் இசையும் படத்திற்கு பலம்.குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோரது இயக்கத்தில் கார்டியன் அனைவரும் ரசிக்கும் வகையான த்ரில்லர்.
