விமர்சனம்: ‘ஹே சினாமிகா’


விமர்சனம்: ‘ஹே சினாமிகா’

நடன இயக்குநர் பிருந்தா முதன்முறையாக  இயக்கி இருக்கும் படம், ‘ஹே சினாமிகா’.

துல்கர் சல்மான் – அதிதி ராவ் ஜோடியாக நடிக்க,   காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் தோன்றி இருக்கிறார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

யாழனும், மௌனாவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்ளும்போது புயல் காற்று அடிக்கிறது கவிதை நடையில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.
அதன் பிறகு யாழனை  மௌனாவுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. இவர்கள் இருவரும் பிறகு பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பதே கதை.
படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே அசத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர்.
யாழனாக துல்கர் சல்மான். வழக்கம்போல ஒரு மாடர்னான வேடம்.
மௌனாவாக அதிதி ராவ் ஹைதாரி.  இயல்பாக நடிப்பு.

மருத்துவர் மலர்விழியாக காஜல் அகர்வால் வில்லியாக நடித்துள்ளார்.
மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பு.
கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பு.
பிருந்தா இயக்கும் முதல் படம் சிறப்பாகவே இயக்கி இருக்கிறார்.
முதல் பாதி முழுக்க துல்கர் சல்மானை பிரிய அதிதி எடுக்கும் முயற்சிகள், அதனை துல்கர் கண்டுகொள்ளாமல் இருப்பது என ஓரளவு சுவாரசியமாக நகர்கிறது.
இரண்டாம் பாதியில் காஜல் கதாபாத்திர வடிவமைப்பும் அவரது நடிப்பும் கிட்டத்தட்ட சஸ்பென்ஸை ஏற்படுத்துகிறது.
யோகி பாபு வரும் காட்சி. படத்துக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
இயக்குநர் பிருந்தாவுக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு.