ஹிட் – தி தேர்ட் கேஸ்’ விமர்சனம்

நாயகன் நானிக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் சிறு ஆற்றின் நடுவே தலைகிழாக தொங்க விடப்பட்டு ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்படும் தகவல் கிடைக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு இடம் மாற்றம் செய்யப்படும் நானி கொடுரமான முறையில் நடக்கும் கொலைகளை பற்றி தெரிந்து கொள்ள மன்னிக்க முடியாத இரண்டு கொலை குற்றவாளிகளை அதே பாணியில் கொலை செய்கிறார்.நானியின் இந்த முயற்சியினால் நாட்டின் பல இடங்களில் நடக்கும் கொலையின் பின்னணியில் இருக்கும் கொடூரமான படு பயங்கரமான தலைவன் தலைமையில் இயங்கும் ஒரு கொலைகார கும்பல் இருப்பது இதன் மூலம் அவருக்கு தெரிய வருகிறது.
படு பாதகமான கொலையாளிகளை அடியோடு வேரறுக்க அவர்கள் அனைவரும் ஓன்று கூடும் இடத்தை தெரிந்து கொண்டு தனி ஒருவனாக அந்த இடத்தை நோக்கி களத்தில் இறங்குகிறார்.
நானியின் இந்த அதிரடியான முடிவில் கொலை வெறியில் கொலையாளிகள் அனைவரையும் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
கம்பீரமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நானி அதிரடி நாயகனாக சண்டைக்காட்சிகளில் ஆக்க்ஷன் விருந்து படைத்து முழு ஆக்ஷன் ஹீரோவாக நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.
கதையின் நாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டி கதைகேற்றபடி தனது இயல்பாக நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். .
மற்றும் சூர்யா ஸ்ரீநிவாஸ்,அதில் பாலா, ராவ் ரமேஷ்,சமுத்திரகனி,கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத்,ரவீந்திரவிஜய்,பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவும்
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.
திரைக்கதை அமைப்பில் பலம் சேர்த்து அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் ஆக்க்ஷன் படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் சைலேஷ் கொலானு அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
ஹிட் – தி தேர்ட் கேஸ்’ கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த கமர்ஷியல் ஆக்க்ஷன்.