ஹாட் ஸ்பாட் படம் நான்கு தனித்த கதைகளை பின்னிப்பிணைக்கிறது,மேலும் நான்கு கதைகளும் ஒன்றாக இணைப்பது மிகவும் சுவாரஸ்யமானது.
முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் காதலர்களாக இருந்த காலம் மாறி பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக கதை நகர்கிறது. பெண்ணினத்தை போற்றும் படி அமைந்துள்ளது.
இரண்டாம் கதை சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.இதுவுமே காதலர்களாகி திருமணம் செய்து கொள்ளும் கதை ஏறக்குறைய முதல் கதையும் இரண்டாம் கதையும் ஏறக்குறைய ஒரே மாதிரி அமைந்துள்ளது.
மூன்றாவது கதை ஜனனி சுபாஷ் நடித்துள்ளனர் இருவரும் காதலிக்கிறார்கள்.சுபாஷ் ஐடி அலுவலகத்தில் பணிபுரியும் போது அங்கு உள்ள அனைத்து பெண்களின் மீது ஆசை கொண்டவர், பத்திரிகையாளரான ஜனனி நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கிறார். இந்த கதை காதல் காமம் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள பாலின இயக்கவியல் அதில் உள்ள முரண்பாடுகளை செல்கிறது.
நான்காவது கதையில் கலையரசன் சோபியா நடித்துள்ளனர் இந்த கதை டிவி ஷோக்களைப் பற்றியது. அதிலும் சிறுவர் சிறுமிகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் ஷோக்களில் அவர்களுடைய மனநிலையும் உடல் நிலையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கூறியுள்ளார் இயக்குனர்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவும் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் அவர்களது இசையும் கதைக்கு பலம்.
திரைக்கதையில் இதுவரை சொல்லப்படாத பல விஷயங்களை வெளிப்படையாக, அழுத்தமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.அவருக்கு பாராட்டுகள்.
ஹாட் ஸ்பாட் நல்லது ,கெட்டது இரண்டும் கலந்த பிரச்சினைகளைப் பேசும் கதை.
