கதையின் நாயகன் தனுஷ் கேட்டரிங் படித்து பாங்காக்கில் தொழிலதிபரான சத்யராஜ் நடத்தும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவைக் காதலிக்கிறார்.தனுஷின் நேர்மையான உழைப்பை பார்த்து சத்யராஜும் இதற்கு சம்மதிக்கிறார்.ஆனால் சத்யராஜின் மகனான அருண் விஜய்க்கு இதில் விருப்பமில்லை. இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் இட்லி கடையை நடத்தி வருகிறார் தனுஷின் தந்தையான ராஜ்கிரண். தனது மனைவி கீதா கைலாசத்தின் உதவியுடன் இட்லி கடையை நடத்தி வருகிறார் ராஜ்கிரண். ராஜ்கிரணின் இட்லி கடை என்றால் வாடிக்கையாளர்கள் ருசித்து சாப்பிடுவதை ரசிக்கும் மனம் கொண்ட அவரது அன்பான பேச்சால் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தனுஷீக்கும் ஷாலினி பாண்டேவுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அப்பா ராஜ்கிரண் இறந்து விட தனுஷ் ஊருக்கு செல்கிறார்.
அப்பா அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே தனது அம்மா கீதா கைலாசத்தையும் இழந்துவிடுகிறார் தனுஷ்.
தனுஷின் பெற்றோர்களை பார்த்துக் கொண்ட பள்ளி தோழியான நித்யா மேனன் தனுஷுக்கு உதவியாக இருக்கிறார்.
அப்பா வாழ்ந்த வீட்டையும் இட்லி கடையையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே இருக்க நினைத்து ஷாலினி பாண்டேவுடனான திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்.
இதனையடுத்து தனுஷை பாங்காக்கிற்கு அழைத்து செல்ல அருண் விஜய் வருகிறார்.
முடிவில் தனுஷ் ராஜ்கிரணின் இட்லி கடையை எடுத்து நடத்தினாரா தனுஷுக்கு ஷாலினி பாண்டேவுடன் திருமண நடந்ததா இல்லையா என்பதை சொல்லுவதே படத்தின் மீதிக்கதை.
முருகன் கதாபாத்திரத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு காட்சிகளிலும் தன் திறமையை மீண்டும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
நித்யா மேனன் அவரது நடிப்பை வழக்கம்போல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் ராஜ்கிரண்
அருண்விஜய்,கீதா கைலாசம், சத்யராஜ், ஷாலினி பாண்டே,இளவரசு,சமுத்திரக்கனி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும்,கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
உண்மை சம்பவங்களை சிலவற்றை அடிப்படையாக வைத்து அழுத்தமான திரைக்கதை அமைப்பில் எதார்த்தமான கிராமத்து உணர்வுகளுடன் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் தனுஷ் மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.
இட்லி கடை புளிப்பில்லாத,தரமான,சுவையான,ஆரோக்கியமான உணவகம்.
