இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

 

ஒரு சிறுகிராமத்திலிருந்து வந்து செல்போன் கடை ஒன்றில் வேலை செய்யும் மேக்னாவை மூன்று இளைஞர்கள் துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் காதலிப்பதாக பொய் சொல்லி மேக்னா ஒரு இடத்திற்கு வரவழைக்கிறார். அதே போல் முன்னாள் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் பாண்டி கமல் தலைமையில் கூட்டாக சேர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கடத்தி வந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றார். இறுதியில் மேக்னா மூவரையும் வரவழைக்கும் காரணம் என்ன? மேக்னாவின் ஏமாற்று வேலையை கண்டுபிடித்தார்களா அந்த மூன்று பேரும் என்ன ஆனார்கள் ஆடுகளம் நரேன் ஏன் இவ்வாறு செய்கிறார் அதற்கான பின்னணி என்ன மேக்னாவும், ஆடுகளம் நரேனும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆடுகளம் நரேன் உண்மையான ரிட்டைர்ட் மிலிட்டரி மேனாக நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அவருக்கு இணையாக பாண்டி கமலும் நடித்துள்ளார்.
மேக்னா ஏலன் தைரியமான கிராமத்துப்பெண்ணாக நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் அவரவருக்க கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.
ஏஎம்எம் கார்த்திகேயன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
பரிமளவாசன் இசை கதையின் பக்க பலம்.
படத்தொகுப்பாளர்களான ராஜேஷ் கண்ணன்,அஜிக்குமார் அவர்களது பணி சிறப்பு.
இது போன்ற பாலியல் குற்றங்கள் செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனையை மக்களே கொடுக்கலாம் என்பதை இயக்குனர் தேவகுமார் இன்னும் கொஞ்சம் விரிவாக தெளிவாக டெக்னிக்கல் ரீதியாக சொல்ல மறந்தது ஏனோ தெரியவில்லை.
இந்த க்ரைம் தப்பில்ல சொல்ல வந்த கருத்தில் கொஞ்சம் தப்பை திருத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.