ஜீவி 2 விமர்சனம்


ஜீவி 2 விமர்சனம்…
எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களின் மனதை தொட்ட நாயகன் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் ஜீவி 2. எதார்த்த வாழ்வியல் உளவியல் கலந்து அனைவருக்கும் புரியும் படி காட்சி படுத்தி திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் வி ஜே கோபிநாத்.
ஜீவி 2 இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கடந்த  2019 ஆம் ஆண்டில் நடிகர் வெற்றி மற்றும்  கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சகர்கள்,திரையுலக பிரபலங்கள் அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி-1
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியா க உள்ளது.
ஜீவி முதல் பாகத்தில் படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கும்.
அதனைப்பற்றி தெரிந்து கொண்ட நாயகன் அதை தடுக்க முயற்சி செய்வர். அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தினாரா இல்லையா? என்பது முதல் பாகத்தின் கதை.
தற்போது இரண்டாம் பாகம் ஜீவி_ 2
நாயகன் வெற்றி இந்த படத்தில் ஆட்டோ ஓட்டும் கதாபாத்திரம்.
தனது மனைவி நாயகியான அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதனால் நிறைய சம்பாதிக்க நினைக்கும் வெற்றி தனது கையில் இருக்கும் 1 லட்சம் பணத்தை கொண்டு செகண்ட் ஹேண்டில் கார் வாங்கி ஓட்டுகிறார் வெற்றி. கருணாகரனுக்கு வெற்றி டீ கடை ஒன்றை வைத்து கொடுக்கிறார்.
அதற்குள் நாயகன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. அஸ்வினியின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப் போவதாக தாய் மாமனாக வரும் மைம் கோபி கூறுகிறார்.
அந்த வீட்டை நம்பிதான் நாயகன் தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு வீட்டை வைக்கலாம் என்று இருந்தார் ஆனால் அதற்குள் இப்படி ஒரு சூழல் ஏற்படுகிறது.
அதே நேரம் அவர் வாங்கிய கார் பழுதாகி விடுகிறது அதனை சரி செய்ய 30 ஆயிரம் தேவை. இது ஒருபக்கம் இருக்க அக்கா மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக குழப்பத்தில் இருக்கும் நாயகனுடன் சேர்கிறார் பணக்கார வீட்டுப் பையனாக வரும் முபாஷிர்.
புது நண்பன் வீட்டுக்கு வெற்றியும், கருணாகரனும் வருகின்றனர் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது.  பணத்தேவையை பூர்த்தி செய்ய அந்த பணக்கார வீட்டில் திருட யோசிக்கிறான் நாயகன் வெற்றி.இதற்கு உடந்தையாக கருணாகரனும் சேர்ந்து கொள்கிறார்.

முபாஷிரின் வீட்டிலேயே பணம், நகைகளை கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டுகிறார்கள்.இந்தக் கொள்ளை முயற்சி நடந்ததா இல்லையா? அதன் பிறகு என்னவானது பிரச்சனையை நாயகன் எப்படி சமாளித்தார் என்பது மீதி கதை இதை அழகாக நகர்த்தியுள்ளார் இயக்குநர்.
ஒளிப்பதிவு பிரவீன் குமார் அழகாக காட்சி அமைத்துள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை ரசிக்க வைக்கிறது.
படத்தொகுப்பு கே.எல்.பிரவீன் சிறப்பாக அமைந்துள்ளது.
நடுத்தர மக்களின் வாழ்வை நிலை நிறுத்தியுள்ளது இந்த ஜீவி2.