வலைதளத்தில் சமூக கருத்துக்களை திறம்பட கையாளும் தைரியமான பேச்சாளராக புகழ்பெற்று விளங்குபவர் ரோகிணி.தனது கணவர் வினித்தை பிரிந்து மகள் லிஜோமோல் ஜோஸ் உடன் தனியாக வாழ்கிறார். இப்படியிருக்கையில் ஒரு நாள் தனது காதலைப் பற்றி தாய் ரோகிணியிடம் கூற சந்தோஷப்பட்டு அவர்களை வீட்டிற்கு அழைக்கும்படி கூறுகிறார்.அதை உடனடியாக ஏற்று லிஜோமோல் ஜோஸ் தனது நண்பர் கலேஷ் ராமானந்த்திடம் தெரிவித்துவரச் சொல்கிறார்.
தன் வருங்கால மருமகனுக்காக வீட்டு வேலை செய்யும் தீபா சங்கரிடம் சொல்லி தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்து பரிசு பொருட்களை வாங்கி வைத்து, தன் கணவன் வினித்திடமும் விஷயத்தை சொல்லி விட்டு அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று கலேஷ் அவருடைய தோழி அனுஷாபிரபுவுடன் லிஜோமோல் ஜோஸ் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். கலேஷை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ரோகிணி, அனுஷாபிரபுவை எதற்காக உடன் அழைத்து வந்திருக்கிறார் என்ற சந்தேக பார்வையுடன் உபசரிக்கிறார். அதன் பின் லிஜோமோல் ஜோஸ் அனுஷாபிரபுவுடன் பழகும் விதமும், கலேஷிடம் கொடுக்கும் பரிசு பொருளை லிஜோமோல் ஜோஸ் அனுஷாபிரபுவிடம் கொடுக்கும் போது லிஜோமோல் ஜோஸ் அனுஷாபிரபுவைதான் காதலிக்கிறாள் என்பதை அறியும் ரோகிணி அதிர்ந்து போகிறார். இதனை என்னதான் முற்போக்கு பெண்ணியவாதியாக இருந்தாலும் மகளின் தேர்வு சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதால் ரோகிணி அக்காதலை ஏற்க மறுக்கிறார்.கணவன் வினிததிடம் இந்த விஷயத்தை பற்றி கூறுகிறார் இதனை கேள்விப்பட்டு அவர்களை பார்க்க வீட்டிற்கு வந்து இருவரிடமும் பேசிகிறார். ஆனால் இருவரும் இவர்களின் பேச்சை எடுத்துக் கொள்ளாமல் தங்களின் காதல் உணர்வை புரியவைக்க முயற்சி செய்கின்றனர். இறுதியில் தன்பாலினக் காதல் உணர்வு நேர்மையானதா பெற்றோர்கள் சம்மதித்தார்களா காதலை பிரித்தார்களா காதலா,குடும்பமா எது வென்றது என்பதே படத்தின் மீதிக்கதை.
ரோகிணி பாசமுள்ள தாயாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
வினித் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
லிஜோமோல் ஜோஸ் புரிந்து கொள்ளும்படி உணர்ச்சிகளுடன் நடிப்பை வழங்கியுள்ளார்.
அனுஷா பிரபுவின் கதாபாத்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது.
மற்றும் தீபா சங்கர் கலேஷ் ராமானந்த் கதைக்கு ஏற்ற அழத்தமான கதாபாத்திரங்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீPசரவணன் ஒளிப்பதிவும் கண்ணன் நாராயணன் இசையும் படத்திற்கு பலம்.
எடிட்டர் டேனி சார்லஸ்,கலை இயக்குனர் ஆறுசாமி படத்திற்கு மற்றொரு பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை திறம்பட கையாண்டு விரசம் கலக்காமல் புரிய வைத்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனை பாராட்டி யே ஆகவேண்டும்.
காதல் என்பது பொதுவுடமை இன்றைய காலகட்டத்தின் மாற்றத்தை அறிந்து புரிந்து கொள்ள வைக்கும் வித்தியாசமான படைப்பு.
