கதையின் நாயகன் துல்கர் சல்மான் என்கிற ஒரு சாதாரண மனிதரை தன்னுடைய திறமையால் பெரிய நடிகராக்குகிறார் மெட்ராஸில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி.அதன் பின் பேரும் புகழும் அடைந்த துல்கர் சல்மான் புகழின் மயக்கத்தில் பழைய கதையை மறந்து தன்னுடைய இமேஜை முன்னிலைப்படுத்தி படத்தில் நடித்து மமதையில் திரிகிறார்.இதனால் கோபமாகும்
சமுத்திரக்கனி துல்கர் சல்மானுக்கு பாடம் புகட்ட படத்தின் முதல் காட்சியில் கொட்டும் மழையில் ஒரு ஸ்டூடியோவில் இருக்கும் அறைக்கு வரும் கோட் அணிந்த மர்ம நபர், அங்கே துப்பாக்கியால் சுடுவது போல் கதைக்களம் தொடங்குகிறது.இந்த கொலை வழக்கில் துல்கர் சல்மான் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்.அதன் பின் விடுதலையாகி வெளியே வரும் துல்கர் சல்மான் பெரிய செல்வந்தரான நிழல்கள் ரவியின் மகள் காயத்ரியை மணந்து கொண்டு மீண்டும் பெரிய நடிப்பு சக்கரவர்த்தியாக மகுடம் சூட்டப்பட்டு சூப்பர் ஸ்டாராகவும் இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறார். முன்னாள் பகை இப்பொழுது விஸ்வரூபமெடுத்து சமுத்திரக்கனியும் துல்கர் சல்மானும் எதிரிகளாக திரிகின்றனர். இந்நிலையில் பல படங்களை தயாரித்த மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர்ரவீந்திர விஜய் நஷ்டத்தில் இருக்க,சமுத்திரக்கனியும், துல்கர் சல்மானையும் இணைத்து ஒரு படம் தயாரித்து நஷ்டத்தை ஈடு கட்ட நினைக்கிறார்.ஏற்கனவே சாந்தா என்ற பெயரில் முன்பு எடுக்க நினைத்து கைவிடப்பட்ட படக்கதையை தேர்ந்தெடுத்து இருவரையும் இணைக்க முயல்கிறார். சமுத்திரக்கனி முதலில் மறுத்தாலும், மாடர்ன் ஸ்டுடியோஸிற்காக இயக்க முன் வர, துல்கர் சல்மானும் இதற்கு சம்மதம் தெரிவித்தாலும் காந்தா என்று படத்தின் பெயரை மாற்றுமாறும்,இறுதிக் காட்சியை மாற்றியமைத்தும், தன் இஷ்டப்படி நடிக்க சுதந்தரம் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டு நடிக்க வருகிறார். மீண்டும் இணையும் இருவருக்குள்ளும் பல ஈகோ மோதல்கள் வெடிக்கிறது. இந்நிலையில் பர்மா அகதியாக இந்தியாவிற்கு வரும் அனாதையான பாக்யஸ்ரீ போர்ஸை கதாநாயகியாக்கி, தான் சொல்வது போல் நடிக்க வேண்டும்,துல்கர் சல்மானின் பேச்சை கேட்கக்கூடாது என்று கண்டிஷனுடன் சமுத்திரக்கனி நடிக்க வைக்கிறார். சமுத்திரக்கனியின் விசுவாசியாக இருக்கும் குமாரி துல்கர் சல்மானுக்கு சவாலாக இருக்க, பிரச்சனைகள் மோதல்கள் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் குமாரியின் அழகிலும்,நடிப்பிலும் கவரப்படும் துல்கர் சல்மான் காதலில் விழுகிறார். இருவரும் காதலிக்க தொடங்க, குமாரி இயக்குனர் சமுத்திரக்கனியையும், துல்கர் சல்மானையும் சமாதானப்படுத்த பெரும் முயற்சி மேற்கொள்ள தோல்வியில் முடிகிறது. இந்த காதலை கேள்விப்படும் செல்வந்தர் நிழல்கள் ரவி பெரும் கோபத்திற்குள்ளாகிறார். படம் முடியும் தருவாயில் இருக்க க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்படுகிறது.இந்நிலையில் குமாரி கர்ப்பமாகிறார், அதனால் துல்கர் சல்மான் மறுநாள் திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று குமாரியிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்.அதன் பின் அந்த ஸ்டுடியோவில் நடக்கும் அசம்பாவிதம் என்ன யாரை கொன்றார்கள் இந்த கொலையை செய்தது யார் எதற்காக படம் தடங்கல்களை மீறி வெளியானதா என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர் டி.கே.மகாதேவனாக துல்கர் சல்மான் படம் முழுவதும் அவரின் மாறுபட்ட கோணங்களில் அனுபவமுள்ள நடிப்பால் வசீகரிக்கிறார்.
இயக்குனர் ஐயாவாக சமுத்திரக்கனி இறுக்கமான முகத்துடன் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை குமாரியாக பாக்யஸ்ரீ ஃபோர்ஸ் சிறப்பு.
மற்றும் போலீஸ் அதிகாரியாக ராணா டகுபதி,ரவீந்திர விஜய்,நிழல்கள் ரவி, காயத்ரி,கஜேஷ் நாகேஷ்,பகவதி பெருமாள்,வையாபுரி ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ் லோபஸ் ஒளிப்பதிவும்,ஜேக்ஸ் பெஜாயின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.
படத்தை நம்பகத்தன்மையுடன், சுவாரஸ்யத்துடன் இயக்கியுள்ள இயக்குனர் செல்வமணி செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் . ‘காந்தா’அனைவரையும் கவரும்.
