கதையின் நாயகன்,இயக்குனர்,தயாரிப்பாளர் சேரன் நடித்திருக்கும் ஆட்டோகிராப் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது உடன்படிக்கும் மல்லிகாவை காதலிக்கிறார். அந்த காதல் பாதிலேயே முறிந்து போக, கேரளா சென்று கல்லூரியில் படிக்கும் சேரனுக்கு உடன்படிக்கும் மாணவி கோபிகா மீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த காதலும் முறிந்து போகிறது. காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்துத் திரியும் சேரனுக்கு சினேகாவின் நட்பு கிடைக்கிறது. அதன் பிறகு சேரன் வாழ்க்கையில் என்ன மாற்றமெல்லாம் நடக்கிறது, அவர் யாரை மணக்கிறார் என்பதெல்லாம் ஒவ்வொரு காதலுக்கும் பிளாஷ்பேக் கதைகளாக திரையிடப்படுவதே படத்தின் மீதிக்கதை.80ஸ் கிட்ஸ்,90ஸ் கிட்ஸ்,2k கிட்ஸ் எல்லோருக்குமான ஒரு கதையைத்தான் அப்போதே படைத்திருக்கிறார் இயக்குனர் சேரன் இதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.சினேகா,கோபிகா,கனிகா, மல்லிகா,கிருஷ்ணா,பெஞ்சமின்,ராஜேஷ் ஆகியோர் தங்களது உணர்வு பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
பரத்வாஜ் இசையும்,சபேஷ் முரளி பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.
ஒளிப்பதிவாளர்களான ரவி வர்மன்,விஜய் மில்டன்,துவாரக நாத் கதைக்கு பெரிய பலம்.
ஆட்டோகிராப் காலத்தால் அழிக்க முடியாத வரலாறு.
