கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்


கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார் . பாசில் வி எடப்பட்டு வசனம் எழுதி இயக்கி உள்ள இந்த குறும்படத்தை , பி ஃபேக்டர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் Dr .அருண் பி தேவ் ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார் ..

பிரபல மலையாள இசையமைப்பாளரான பிரசாந்த் மோகன் எம்.பி, கௌரி கிஷனுடன் இணைந்து இந்த குறும்படத்தில் நடித்துள்ளார் .மேலும் பிரசாந்த் மோகன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் உள்ள ஒரு பாடலை பாடகர்கள் கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளனர். தமிழில் பாடல் வரிகள் மற்றும் வசனத்தை VJ திவகிருஷ்ணாவும் , மலையாளத்தில், விநாயக் சசிகுமார் பாடல் வரிகளை எழுத , விஜய் யேசுதாஸ் மற்றும் மிருதுளா வாரியர் பாடலைப் பாடியுள்ளனர். கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு பாடல் வரிகளை பிரணவ் எழுதியுள்ளார். இந்தப் கன்னட பாடலை உன்னி மேனனும், இந்தியில் ஆன்சி சஜீவும் பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவு – நிதிஷ் சந்திரன்.
படத்தொகுப்பு – அஸ்வந்த் எஸ் பிஜு.
கலை இயக்கம் – ராசி ஷௌகத்.
ஆடைகள் – அஞ்சு அல்போன்சா.
ஒப்பனை – சுஜித் பரவூர், ஷைஜு கார்த்திக்.
தலைமை கூட்டாளி – அமல் முகமது.
அசோசியேட்ஸ் – தீபக் ராஜ் ஆர்.கே., ஆகாஷ் ஜே.எஸ்.
தயாரிப்புக் மேற்பார்வை – ராகுல் ராஜாஜி.
தயாரிப்பு நிர்வாகி – ஜினிஷ் ஜார்ஜ்.
தயாரிப்பு மேலாளர் – ஜென்சன் ஜார்ஜ்.
ப்ரோக்ராமிங் – ஸ்ரீராக் சுரேஷ்.
மிக்ஸ் – ஸ்ரீராக் கிருஷ்ணன்.
DI – பாபி ராஜன்
கேமரா அசோசியேட் – விஷ்ணு வாமனன்.
ஸ்டில்ஸ் – பினு பால்
காஸ்டிங் டைரக்டர் – ஷாம்நாத் பரம்பில்
விளம்பர வடிவமைப்பு – ரோஸ்மேரி லில்லு..
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி , திருமுருகன்