பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

மன்சூரலிகானின் மகன் துக்ளக் இப்படத்தில் அறிமுகமாகிறார். அவர் சிறந்த நடிகராக உயர வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவில்லை. அது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.

கேட்டால் தீட்டு என்கிறார்கள். மற்ற கோயில்களில் மட்டும் பெண்களை அனுமதிக்கிறார்கள். அங்கு தீட்டு இல்லையா?,

அதை கேட்டால் ஐயப்பன் பிரம்மசாரி என்கிறார்கள். அப்படியென்றால் ஹனுமன் மற்றும் பிள்ளையார் எல்லாம் பிரம்மசாரிகள் இல்லையா? அங்கே பெண்கள் செல்லவில்லையா?,

என்னைக் கேட்டால் பெண்களை அனுமதிக்க பெண்களுக்காகவே ஒரு ஐயப்பன் கோயில் கட்ட வேண்டும் என்பேன். என்று ஆவேசமாக பேசினார் சீமான்.