
சத்யதேவ் மரணத்தை எதிர்நோக்கும் நிலையிலும் மன உளைச்சலாலும் குற்றவுணர்வாலும் தவிக்கும் அவரது வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் உண்மைகளே படத்தின் திரைக்கதையாக மாறுகின்றன. கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி சொல்லப்படும் கதை படத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது.மனித மனத்தின் சிக்கல்களையும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிறவெறி,மற்றும் சாதி,பரம்பரை பெருமை போன்ற கருத்துகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ளதே மீதிக்கதை.
ராமப்பா ராவ் பகதூராக சத்யதேவின் நடிப்பு உடல்மொழி,முகபாவனை,உணர்ச்சி வெளிப்பாடு என ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
மற்றும் தீபா தாமஸ்,விகாஸ் முப்பாலா,பாலா பரசர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவும்,சமரன் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
வழக்கமான சினிமாவை தவிர்த்து,நாடக மேடை பாணியையும் கலைநயமிக்க காட்சியமைப்பையும் பயன்படுத்தி இன்றைய வணிக சினிமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு.தனித்துவமாக ஒரு கதையை தெரிய படுத்தி இருக்கும் இயக்குனர் வெங்கடேஷ் மகா அவர்களுக்கு பாராட்டுகள்.
‘ராவ் பகதூர்’அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கதை.
