“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” விமர்சனம்

நீதிபதி கன்யா பாரதி முன் அருவி மதன் கொலை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் அருவி மதனும் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறார்.ஆனால் நீதிபதி கன்யா பாரதி அதை நம்பவில்லை. இருந்தாலும் தீர்ப்பு நாளைக்கு வழங்கப்படும் என்று வழக்கின் தீர்ப்பை மறுநாள் தள்ளி வைத்து விடுகிறார்.அன்று இரவு முழுவதும் நீதிபதியால் தூங்க முடியவில்லை. அப்போது கடலூரில் 1972 ஆம் ஆண்டில் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்கிறார் நீதிபதி கன்யா பாரதி 1972 ஆம் ஆண்டில் வெற்றி கொலைக் குற்றவாளியாக நீதிபதி முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.நீதிபதியின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால் கொலைக் குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டு தனக்கு தண்டனையை வழங்கிவிடுங்கள் என்று கூறுகிறார். இந்த வழக்கிற்கும் 2022 ஆம் ஆண்டு நீதிபதி கன்யா பாரதி விசாரிக்கும் வழக்கிற்கும் என்ன தொடர்பு நீதிபதி கன்யா பாரதி அருவி மதனுக்கு தூக்குத் தண்டணை விதித்தாரா இல்லையா 1972 ல் குற்றவாளி கூண்டிக் நிற்கும் வெற்றி ஏன் நீதிபதியின் முன் மௌனம் சாதிக்கிறார் தனக்கு தண்டனை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று ஏன் கூறுகின்றார் என்பதே மீதிக்கதை.
நாயகன் வெற்றியின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பாக அம்மாவை கட்டிப்பிடித்து அழும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்களையும் ஈரமாக்கி விடுகிறார்.
மற்றும் ரங்கராஜ் பாண்டே,பிரிகிடா,மாறன்,சரவணன்,லசிஆண்டனி,அருவி மதன்,கன்யா பாரதி,சுப்பிரமணியம்சிவா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
எம்.வி.பன்னீர் செல்வம் அவர்களின் ஒளிப்பதிவும்,தர்புகா சிவா அவர்களின் இசையும் படத்திற்கு பலம்.
கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதை மையக்கருவாக கையில் எடுத்து கவிதா பாரதி அவர்களோடு கைகோர்த்து சிறந்த திரைக்கதை வசனங்களை அமைத்து சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” புதிய சிந்தனை,புதிய புரட்சி.