’ஐ , நோபடி’  விமர்சனம்

வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள்.பின்னர் ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது.
இதே சமயம் எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள்.பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள்.ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள்.
இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இருக்கிறது.பிரித்விராஜ் அங்கு நீண்ட நேரமாக இருந்தது சந்தேகத்தை அதிகரிக்கிறது.இதனால் அந்த கொள்ளைச் சம்பவத்தில் பிரித்விராஜுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதத் தொடங்குகிறார்கள்.இதற்கிடையே போலீசாரின் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன.இதன் விளைவாக பிரித்விராஜுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.அந்தச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக பிரித்விராஜ் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எதிர்பாராத விதமாக புதிய பிரச்சினைகளை உருவாக்கி அவரை மேலும் சிக்கலான சூழ்நிலைக்குள் தள்ளுகிறது.இறுதியில் இந்தப் பிரச்சினைகளில் இருந்து பிரித்விராஜ் மீண்டு வந்தாரா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டு காணாமல் போன பணம் மீட்கப்பட்டதா சம்பந்தமே இல்லாத அந்த வங்கிக்கு அவர் சென்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றும் ஹக்கிம் ஷாஜகான்,
விஜயராகவன்,சங்கர் ராமகிருஷ்ணன், அசோகன்,மதுபால்,ஜியா என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையும்,ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்.
வங்கி கொள்ளை சம்பவத்தை மையக் கருவாக கையில் எடுத்து நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் நகரும் விதமாக சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் நிஸாம் பஷீர் அவர்களுக்கு பாராட்டுகள்.
’ஐ ,நோபடி’வித்தியாசமான ட்விஸ்ட்டுகள் நிறைந்த த்ரில்லர்.