கடுக்கா விமர்சனம்

அம்மாவின் உழைப்பில் வேலைக்கு செல்லாமல் வாழும் நாயகன் விஜய் கெளரிஷ் வீட்டுக்கு எதிரே குடியேறும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதல் வயப்பட்டு அவரை தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துவருகிறார்.அதே சமயம் அவரது நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்வது கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை தருகிறது.
விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக்கொள்வது போல் நடக்கும் ஸ்மேஹா மறுபுறம் ஆதர்ஷையும் காதலிப்பதாகச் சொல்கிறார்.உண்மை வெளிப்படும் தருணத்தில் இருவரையும் குழப்பி காதல் மயக்கத்தில் சிக்கவைக்கும் விதத்தில் அவள் நடக்கும் விதம் கதையை நகைச்சுவையுடன் நகர்த்துகிறது. ஆனால் அவர் ஏன் அப்படி செய்கிறார் உண்மையில் அவர் யாரை காதலிக்கிறார் இருவரையுமே காதலிக்கவில்லயா என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் கெளரிஷ் காதலுக்காக ஏங்கி தவிக்கும் ஏக்கமிகு இளைஞனாக சிறப்பாக நடித்துள்ளார்.
எளிமையாக நடித்திருக்கும் ஸ்மேஹா பெண்களின் மனக்குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான ஆதர்ஷ்,மஞ்சுநாதன்,மணிமேகலை,சுதா கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
கெவின் டி.கோஸ்டாவின் இசையும்,சதிஷ் குமார் துரைகண்ணுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்து
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை நேர்த்தியான முறையில் எடுத்து கூறி அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கும் இயக்குனர் எஸ்.எஸ். முருகராசு அவர்களுக்கு பாராட்டுகள்.
‘கடுக்கா’பார்வையாளர்களுக்கு கடுக்கா கொடுக்காது.