கருப்பு பல்சர் விமர்சனம்

நாயகன் தினேஷ் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுக்கிறார்.அதன் மூலம் ரேஷ்மாவை சந்திக்கிறார்.முதலில் இருவரும் பழகுகிறார்கள் பின் காதலிக்கிறார்கள். ஒரு சாதாரண ஒரு பைக் மட்டும் வைத்துள்ள தினேஷ்,தன்னிடம் ஒரு கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி காதலி ரேஷ்மாவை இம்ப்ரஸ் செய்கிறார்.கருப்பு பல்சர் பைக்கில் செல்ல வேண்டும் என்று ரேஷ்மா ஆசைப்பட தான் செல்லிய பொய்யை உண்மையாக்க தன் நண்பன் பிராங்கஸ்டர் ராகுலுடன் சேர்ந்து பழைய கருப்பு பல்சர் பைக் விற்பனைக்கு இருக்கிறதா என்று பல இடங்களில் தேடி ஒரு பழைய கருப்பு பல்சர் வண்டியை வாங்குகிறார். அதனை தொடர்ந்து அந்த கருப்பு பல்சர் பைக்கை வாங்கியதிலிருந்து அவருக்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
தினேஷ் இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் அசத்தியுள்ளார்.
இரண்டு நாயகிகளாக ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
மற்றும் மன்சூர் அலிகான்,சரவண சுப்பையா,கலையரசன் கண்ணுசாமி, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமப்பாளர் இன்பாவும், ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகமும் படத்திற்கு கூடுதல் பலம் தந்துள்ளனர்.
காதல்,மர்மம்,நகைச்சுவை மற்றும் ஒரு அமானுஷ்ய சக்தி ஆகியவற்றை இணைத்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் முரளி கிருஷ் எஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
கருப்பு பல்சர் வித்தியாசம் நிறைந்த த்ரில்லர்.