“கருப்பு” விமர்சனம்

நாயகன் சூர்யா கருப்பசாமி உருவத்தில் மனிதனாக வந்து நடித்திருக்கிறார்.நீதிமன்றங்களில் பல ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப்படாமல் நிலுவையில் கிடக்கின்றன.வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிவிட்டால் தனது பிழைப்புக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று பல வழக்கறிஞர்கள் தீர்ப்பளிப்பதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு பெண்ணின் வழக்கை வாதாடும் வழக்கறிஞராக வரும் ஆர்.ஜே.பாலாஜி அப்பெண்ணின் வழக்கிற்கு தீர்ப்பளிக்க முடியாதபடி வாய்தா வாங்கிக் கொண்டும் வழக்காடுவதற்கு அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டும் இருக்கிறார். இதையறிந்த அந்த பெண்ணும் தனது வழக்கை விசாரிக்க மற்ற வழக்கறிஞர்களை நாடுகிறார்.ஆனால் எந்த வழக்கறிஞர்களும் அப்பெண்ணின் வழக்கை எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். அப்போது அந்த பெண் நீதிமன்ற வளாகத்திலுள்ள கருப்பசாமி கோவிலில் வந்து முறையிடுகிறாள். அவளின் பிராத்தனைக்கு மனமிறங்கிய கருப்பசாமி சூர்யா உருவத்தில் மனிதனாக வருகிறது.சூர்யாவுக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் ஒரு சவால் வருகிறது.அது என்ன சவால்? நீதிமன்றத்தில் தேங்கிகிடக்கும் வழக்குகள் என்ன ஆனது வேண்டுதல் செய்த அந்த பெண்ணின் வழக்கை வாதாட எந்த வழக்கறிஞர் முன்வந்தார் என்பதே மீதிக்கதை.
சூர்யா ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களுக்கு ஒரு படையல் விருந்தயே படைத்திருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜியும் சூர்யாவிவுக்கு ஈடுகொடுத்து வழக்கறிஞராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரிஷா மற்றொரு வழக்கறிஞராகவும் கருப்பசாமியின் பக்தையாகவும் வரும் காட்சிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்கிறார்.தனது கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார்.
மற்றும் இந்திரன்ஸ்,நட்டி நட்ராஜ், சுவாஷிகா,ஷிவிதா,அனஹா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சாய் அபயங்காரின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
நீதிமன்ற அவலங்களை துடைத்தெறிய வேண்டும் என்ற சமூக அக்கறையான கதைக்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து வழக்கமான அவரின் நகைச்சுவை பாணியுடன் இயக்கி இருக்கும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு பாராட்டுகள்.
“கருப்பு”நீதிமன்ற அவலங்களை சுட்டிக் காட்டியுள்ள வெண்மை