“சட்டென்று மாறுது வானிலை” விமர்சனம்

நாயகன் ஜெய் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அங்கு அமைச்சர் மகள் மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்தவுடன் அவர்மீது காதல் வசப்படுகிறார்.இருவரும் காதலித்து திருமணமும்
செய்துகொள்கிறார்கள்.இருவரும் தேனிலவுக்காக கொடைக்கானலுக்குச் சென்று அங்கு கருடன் ராம் நடத்திவரும் விடுதியில் தங்குகிறார்கள்.அங்கிருந்து திரும்ப வந்த பிறகு ஜெய்,மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.மேலும் கருடன் ராம் விடுதியில் ஏதோ மர்மம் இருப்பதையும் ஜெய் அறிந்து கொள்கிறார். ஒரு பக்கம் மீனாட்சியின் தந்தையான அமைச்சர் அஜய்,மீனாட்சியை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.மீனாட்சியின் நண்பர் சொத்துக்காக மீனாட்சியை திருமணம் செய்ய நினைக்கிறார்.இவ்வளவு பிரச்சனையில் ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தார்களா இல்லையா கருடன் ராம் நடத்திவரும் விடுதியில் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜெய் ஐடி இளைஞராக துடிப்புடன் நடிப்பில் வேகம் காட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்்து இருக்கிறார்.
மற்றும் யோகிபாபு,கருடா ராம்,சத்யன், ஶ்ரீமன்,ஆதித்யா கதிர் ஆகியோர் சிறப்பாக தங்களது பணிகளை செய்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையும்,ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
ஒரு யதார்த்தமான கதையை சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து திரைக்கதையின் இறுதிவரை வேகம் குறையாமல் இயக்கி இருக்கும் இயக்குனர் பாபு விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்.
“சட்டென்று மாறும் வானிலை” யதார்த்தம் நிறைந்த காதல்.