ஒரு கர்ப்பிணி பெண்ணுடன் ஐந்து ஆண்கள் புறப்பட்டு ஒரு வாகனம் மட்டுமே செல்ல கிராமப்புற ரோட்டில் மிகவும் அவசரமாகவும் பதட்டமாகவும் பயணிக்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது காருக்கு முன்னால் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் (கதிரேசகுமார்) சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். கார் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்தாலும் காதில் வழாததது போல் கதிரேசகுமார் தனக்கு பின்னால் வரும் இந்த காருக்கு தொடர்ந்து வழிவிடாமல் சென்று கொண்டிருக்கிறார். காரில் இருந்தவர்கள் பல முறை குரல் கொடுத்தும், ஒலி எழுப்பியும் அவர் தொடர்ந்து மெதுவாக வழிவிடாமல் செல்ல, ஒரு கட்டத்தில் காரில் பயணிப்பவர்கள் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அவரிடம் வழி விட்டு செல்லுமாறு சொல்கிறார்கள். அப்போதும் வழிவிடாமல் பெரியவர் மௌனமாக தொடர்ந்து சைக்கிளில் பயணிக்க, காரில் இருப்பவர்கள் கோபமடைந்து அவரை அடிக்கிறார்கள். அடி வாங்கியும் அவர் வழிவிடாமல் தன் சைக்கிளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி கார் முன்நோக்கி செல்ல விடாமல் பாதையை தடுக்கிறார். இந்த செயல் காரில் வந்தவர்களை மேலும் கோபமடைய வைக்கிறது. அதன் விளைவு அவர்கள் சைக்கிளை தூக்கி ஓரமாக வீசுகிறார்கள். இதனால் கோபமடையும் பெரியவர் அவர்கள் காரை நோக்கி சென்று காரில் இருந்து கார் சாவியை எடுத்து வீசி விடுகிறார், மேலும் காரில் இருக்கும் கர்ப்பிணி பெண்னை முறைத்து பார்க்கிறார். மீண்டும் அந்த பெரியவரை அடிக்கிறார்கள். இச்சம்பவம் நடைபெறும் போது அந்த வழியே கிராம நிர்வாக அதிகாரியும் வருகிறார், நடந்தவற்றை அறிந்து அந்த பெரியவரை வழிவிடுமாறு அவர் கூற, அதற்க்கும் பெரியவர் செவிகொடுக்கவில்லை.காரில் வந்தவர்கள் ஊரில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளிடம் இந்த விஷயத்தை கூற, ஊரிலிருந்து ரவுடிகள் நேரில் வந்து பெரியவரை மிரட்டியும், அடித்தும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த அடிக்கும் மிரட்டலுக்கும் பயப்படாமல் தொடர்ந்து தன் சைக்கிளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி விடுகிறார். இதனிடையில் அந்த பெரியவர் யாருக்கோ தன் செல்போனில் மெசேஜ் அனுப்புகிறார்.அப்போது இரு மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்த பின் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெறுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்ன யார் அந்த பெரியவர் அவர் எதற்காக அந்த காருக்கு வழிவிடாமல் தடுக்கிறார் அவருக்கும் அந்த காருக்கும் என்ன சம்பந்தம் யாருக்கு மெசேஜ் அனுப்பினார் அது என்ன மெசேஜ் போன்ற கேள்விகளே கெழப்பய படத்தின் கதை.
படத்தின் தயாரிப்பாளரான கதிரேசகுமார் கதையின் நாயகனாக கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து படம் முழுவதும் பேசாமலேயே அழுத்தமான நடிப்பின் மூலம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார்.
மற்ற நடிகர்களான கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், கர்ப்பிணியாக அனுதியா, விஏஓ வாக ‘உறியடி’ ஆனந்தராஜ் உட்பட அனைத்து நடிகர்களும் அந்த அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஒளிப்பதிவு மிகவும் அருமை.
எடிட்டர் ராஜேஷ் அவர்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
கெபி இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி பெரிய பலத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் யாழ் குணசேகரன் படம்
பார்பவர்களை கதையோடு ஒன்ற வைத்துள்ளார் இதற்காக இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.
கெழப்பய இளமையாகவே இருக்கிறது.