kollywood news

‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

*சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு*

*திரையை ஆக்கிரமிக்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் ரன்பீர் கபூரின் இரு வேறு தோற்றங்கள் (Double Avatar)*

*சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் அழுத்தமான வேடத்தில் ஜொலிக்கும் ரன்பீர் கபூர்*

*சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்திற்காக வெளியிடப்பட்ட இரண்டு அதிரடி போஸ்டர்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரன்பீர் கபூர்*

*சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்திற்கான இரண்டு போஸ்டர்களில் ரன்பீர் கபூர் தனது பிரத்யேகமான மற்றும் ஆழமான பாவனைகள் மூலம் புதியதொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்*

சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரன்பீர் கபூரின் இரண்டு புதிய தோற்றங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாகும். ரன்பீர் கபூர் – ஆலியா பட் – விக்கி கவுஷல் ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் இந்தப் படைப்பு, ரசிகர்களுக்குத் தனித்துவமான திரைப்பட விருந்தாக அமையவுள்ளது.

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரன்பீர் கபூர் தோன்றும் பிரமிக்கவைக்கும் முதல் போஸ்டரில் பன்சாலியின் உலகத்தைப் பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்தப் போஸ்டரில் ரன்பீர் கபூர் மிகவும் வசீகரமான தோற்றத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். பன்சாலியின் பிரத்யேகமான பிரம்மாண்டமும், தனித்துவமான விவரங்களும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. திரையில் அவர் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கத் தயாராகி இருக்கிறார் என்பதை இது உணர்த்துகிறது.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழுவினர் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை இப்படம் காட்சிப்படுத்தும் உலகத்திற்குள் இன்னும் ஆழமாக அழைத்துச் செல்கிறது. முதல் போஸ்டர் ஒரு பிரம்மாண்டமான மாற்றத்தை உணர்த்தியது என்றால், இரண்டாவது போஸ்டர் ரன்பீர் கபூரின் தோற்றத்துடன் உணர்ச்சிகரமான பின்னணியையும் விவரிக்கிறது. பன்சாலியின் வழக்கமான நேர்த்தியான சினிமா பாணியுடன், இயல்பான, அழகான, ஆழமான உணர்வுகளை இணைக்கும் வகையில் அமைந்து, முற்றிலும் புதியதொரு காட்சி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

இரண்டு போஸ்டர்களிலும் இடம்பெற்ற ஆற்றல்மிக்க பின்னணி இசையானது, பன்சாலியின் பிரம்மாண்டம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான பாணியைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அத்துடன், இந்தக் கூட்டணி புதிய எல்லைகளை ஏற்படுத்தி, அதனைக் கடந்து செல்லப் போவதையும் நிரூபிக்கிறது.

திரையரங்குகளில் காதல் மற்றும் உணர்ச்சிகரமான கதை அம்சத்தை பன்சாலி ஜீவனுள்ளதாக உருவாக்குவதைக் காண்பது என்பது எப்போதும் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பிரம்மாண்ட படைப்பிற்கான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல் ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘லவ் & வார்’ திரைப்படம், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Get real time updates directly on you device, subscribe now.