கதையின் நாயகன் அசோக் இரத்தக் கறைகளுடன் நேராகக் காவல் நிலையத்திற்குள் நுழைகிறான்.அங்கு பணியில் இருக்கும் உயர் காவல் அதிகாரி யுகனிடம் தான் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டதாகக் கூறிப் பதற்றமின்றிச் சரணடைகிறான்.தான் தீவிரமாகக் காதலித்த நிஷாவையும்,அவளைக் கொல்வதற்காக அவளது கோடீஸ்வரத் தந்தை ஏவிவிட்ட கூலிப்படை ஆளையும் தானே வெட்டிக் கொன்றுவிட்டதாக அசோக் வாக்குமூலம் அளிக்கிறான்.அசோக் குற்றத்தை மிக எளிதாக ஒப்புக்கொண்டாலும் காவல் அதிகாரி யுகனுக்கு அவன் மீது சந்தேகம் எழுகிறது.அசோக் சொல்லும் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் இருக்கின்றன.விசாரணையை தீவிரமாக்கும் போது விஜய் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதும் அவனது பின்னணியில் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதும் தெரியவருகிறது. அசோக்கின் நண்பன் ஆட்டோ டிரைவர் அர்ஜூனா துரைசாமி மற்றும் மருத்துவம் பார்க்கும் டாக்டர் அரவிந்த்ராஜ் மூலம் அசோக்கிற்கு ஒரு விசித்திரமான மனநலக் குறைபாடு இருப்பதும் அதாவது ‘யாராவது ஒரு சம்பவத்தை நீதான் செய்தாய் என்று தொடர்ந்து கூறினால் அதைத் தனது சொந்த நினைவாக நம்பத் தொடங்கி அதை தான் தான் செய்ததாக ஒப்புக்கொண்டு சொல்லி விடும் தன்மை இருப்பதை இன்ஸ்பெக்டர் அறிந்து கொள்கிறார்.அசோக் காதலித்ததாகச் சொல்லும் நிஷா உண்மையில் யார் அவளுக்கும் அசோக்கிற்கும் இடையே நடந்தது என்ன என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.விசாரணையின் போது, கதையில் மேலும் இரண்டு பெண்கள் மேல் விசாரணை திரும்புகிறது.சங்கவி அசோக்கின் கடந்த காலத்தோடு நெருங்கிய தொடர்புடைய பெண் மற்றும் சிமுஅத்வானி இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மற்றொரு முக்கிய நபர்.அசோக் கூறிய கொலைகள் உண்மையில் நடந்ததா அல்லது வேறு யாரையோ காப்பாற்ற அவன் நாடகமாடுகிறானா அல்லது அதிகார வர்க்கத்திற்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகள் எழுகின்றன. ஓய்.ஜி.மகேந்திரன் நடுவராக வரும் நீதிமன்றக் காட்சிகள் இந்த வழக்கின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.கதையின் இரண்டாம் பாதியில் நிஷா கொல்லப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது.அசோக் சரணடைந்ததன் நிஜமான நோக்கம் பழிவாங்குவதா அல்லது ஒரு பெரிய உண்மையைக் காவல் துறைக்கு உணர்த்துவதா உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் அசோக் நடித்துள்ளார்.காவல் நிலையத்தில் அமைதியாகச் சரணடையும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.இவரது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
நிஷா பூஜா கதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வழங்கி நடித்துள்ளார்.
மற்றும் யுகன்,சங்கவி,சிமுஅத்வானி,அரவிந்த் ராஜ்,ஓய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
காதர் அவர்களின் இசையும்
ஒளிப்பதிவாளர் வி.எஸ்.வேலன் அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து வழக்கமான த்ரில்லர் பாதையில் பயணிக்காமல் சஸ்பென்ஸ் படமாக இக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
கிட்டி பல வித வித்யாசங்கள் நிறைந்த சிறப்பான த்ரில்லர்.
