
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தயாரிப்பில், பாலாஜி குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கொலை”.

அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்வையிடும் போது, அங்கு வருகைதந்த உயர் அதிகாரி புதிதாக பணியில் சேர்ந்த ரித்திகா சிங் மேலும் ஏற்கனவே பல வழக்குகளில் உண்மையை கண்டறிந்து அனுபவம் வாய்ந்த அதிகாரியான விஜய் ஆண்டனி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை முடிக்குமாறு உத்தரவிடுகிறார்.
விஜய் ஆண்டனியின் மகள் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சில மாதங்களாக காவல்துறை பணியிலிருந்து ஒதுங்கி இருந்த நிலையில், அவரிடம் பயிற்சி பெற்ற ரித்திகா சிங் கேட்டுக் கொண்டதற்காக வழக்கை விசாரணை செய்ய சம்மதிக்கிறார்.

முதலில் மாடல் அழகியின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண்ணிடம் இருந்து விசாரணை ஆரம்பிக்கின்றது,அடுத்து அங்குள்ள காவலாளி, அங்கு வந்து சென்றவர்கள் என பல கோணங்களில் விசாரணை தொடர்கிறது. மேலும் கிதார் வாசிக்கும் நீதிபதியின் பேரன், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மனநிலை சரியில்லாத பையன், மாடலிங் துறையில் பிரபல நிறுவனத்தின் மேலாளர் என அந்த மாடல் பெண் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ள படுகிறது.
இறுதியாக மாடல் அழகி யார் கொலை செய்தார்கள் என்பதை விஜய் ஆண்டனி, ரித்கா இருவரும் கண்டுபிடித்தனரா இல்லை யா என்பது மீதிக்கதை...

கொலை வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மாடலிங் துறை பற்றி விரிவாக சொல்லியிருப்பது கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

விஜய் ஆண்டனியின் எதார்த்தமான நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம்.விபத்தில் மகள் அடிபட்டு சிகிச்சை பெறும் சோகம் ஒரு புரம் அதோடு விசாரணை பளு என இரு பொருத்தமான முகபாவஙகளை முன் நிறுத்தி உள்ளார்.

காவல் அதிகாரியாக ரித்திகாசிங் கச்சிதமாக பொறுந்தியுள்ளார் மீனாட்சி சௌத்ரி தனக்கான பணியை நிறைவாக செய்துள்ளார்.
வித்தியாசமான ஒரு க்ரைம் த்ரில்லரை இயல்பாக ரசிக்கும் படி படைத்துள்ளார் இயக்குநர் பாலாஜி கே. குமார்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டுக்குரியது ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.
க்ரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை படத்திற்கு பெரிய பலம் பாடல்களும் அருமை.

மொத்தத்தில் கொலை அனைவராலும் ரசிக்க கூடிய ஒரு கலை.
