கொம்பு சீவி விமர்சனம்

கதையின் நாயகன் சண்முக பாண்டியன் தாய் இறந்ததால் உறவுகளால் கைவிடப்பட்ட அவரை சரத்குமார் தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார்.மாமன் மச்சானாக இருவரும் பழகுகின்றனர்.ஊர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களைக் காப்பாற்றும் இடத்தில் சரத்குமார் இருக்கிறார்.ஊர் மக்கள் கஞ்சா போன்ற போதை வஸ்து தயாரித்து விற்று அதில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.கஞ்சா கடத்தும் சண்முக பாண்டியனும்,சரத்குமாரும் அடிக்கடி போலீசில் சிக்குகின்றனர்.ஒரு கட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரி இவர்கள் இருவர் மீதும் வஞ்சம் வைக்கிறார்.அதன் பிறகு நடப்பது என்ன என்பதே மீதிக்கதை.
ரொக்க புலி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் வழக்கமான தனது தோரணைகளை விட்டுவிட்டு வித்தியாசமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சண்முக பாண்டியன் இளம் ஹீரோவாக மாறுபட்ட கதாபாத்திரம் என்றாலும் அதை வேறு நடிகர் சாயல் எதுவும் இல்லாமல் தனது பாணியில் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் தாரணிகா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் காளி வெங்கட்,முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான்,சுஜித் சங்கர்,கல்கி ராஜா ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையும்,பால சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குனர் பொன்ராம் படமென்றாலே காமெடியும் காதலும் இருக்கும் இதில் கூடுதலாக ஆக்க்ஷனையும் சேர்த்து மாறுபட்ட கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறார் பாராட்டுகள்.
கொம்பு சீவி அனைவரும் ரசிக்கலாம்.