kollywood news

“கூர்மன்” விமர்சனம்

 

மனதில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே கண்டுபிடிக்கும் கதை தான் இந்த “கூர்மன்”. கூர்மையான அறிவுடையவன்
தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில், குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம்.
படம் ஆரம்பித்து கூர்மன் அறிமுகமாவதும் அவரிடம் வருபவர்களை விசாரிப்பதும், என ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத திரைக்கதையும் என முதல் பாதி முடிவதே தெரியவில்லை. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ் மட்டுமே. படத்தின் பின் பாதி முழுக்கவே பில்டப் உடைந்து சாதராண படமாக மாறிவிடுகிறது.
படத்தின் ஆரம்பத்தில் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஒரு அதிகாரியை காட்டும்போதே அவரிடம் ஒரு சிக்கலான கேஸ் வந்தால் எப்படி இருக்கும் என ஆவலாக இருக்கிறோம் ஆனால் நம்மை மொத்தமாக ஏமாற்றுகிறார்கள்.
இரண்டாம் பாதியில்.

ராஜாஜி மிடுக்காக இருக்கிறார். ஆனால் படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார். பாலசரவணன் அடிக்கும் பஞ்ச்கள் படத்தை சில இடங்களில் காப்பாற்றியுள்ளது. ஜனனி ஐயருக்கு நடிக்க வாய்ப்பு கள் சரியாக அமயவில்லை.
இசை பரவாயில்லை ரகம், ஒளிப்பதிவு தரம். ஒரு நல்ல முயற்சி இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் “கூர்மன்” ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.