ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தில் காவல் அதிகாரி ஏசிபி விதார்த் ஒரு கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை துணிச்சலாக கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இவருடைய மனைவி ஸ்வேதா டோரத்திக்கு அதிர்ச்சியால் பயம் ஏற்பட்டால் உடனே மயங்கி விழும் அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் கவனமாக பார்த்துக் கொள்ளும் கட்டாயம் விதார்த்துக்கு. மற்றொருபுறம் விபின் மற்றும் சஹானா தம்பதியர் ஒரு வீட்டில் தனியாக வாழ்கின்றனர்.அன்று இரவு ரோந்துக்கு வரும் போலீசார் கருப்பு கோட் அணிந்த ஒரு சைக்கோ மனிதன் கையில் இரும்பு தடியுடன் கண்ணில் பட்டவர்களை அடித்து கொலை செய்ய அதை நேரில் பார்க்கும் கான்ஸ்டபிள் தன் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்களும் அவனை பிடிக்க சென்று அடிபட்டு கிடக்க,இந்த தகவல் ஏசிபி வித்தார்த்திற்கு தெரிய வர உடனே அந்த இடத்திற்கு வந்து சைக்கோ மனிதனை பிடிக்க ஒரு தனிப்படையை அனுப்பி விட்டு தானும் பல இடங்களில் தேட தொடங்குகிறார்.பல கொலைகள் அடுத்தடுத்து நடக்க,அந்த சீரியல் சைக்கோ கில்லரை ஏசிபி வித்தார்த் பிடித்தாரா யார் அந்த சைக்கோ கில்லர் எதற்காக இத்தனை கொலைகளை செய்கிறான் வித்தார்த்தின் மனைவியை அந்த சைக்கோ கில்லர் விட்டு வைத்தானா என்பதே படத்தின் மீதிக்கதை.
விதார்த் போலீஸ் உயர் அதிகாரியாகவும்
நல்ல கணவனாகவும் சரிசமமாக தன் பங்களிப்பை கொடுத்து நடித்துள்ளார்.
டோரத்தி அழுத்தம் குறைவான கதாபாத்திரம் என்றாலும் அதை நன்றாக செய்துள்ளார்.
மற்றும் சஹானா, விபின், பசுபதி ராஜ், கஜராஜ்,மீனாபுஷ்பராஜ் ,மதன் அர்ஜுனன் ஆகியோரின் நடிப்பு படத்தின் பலம்.
ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும்,பிரவீனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்துள்ளது.
இயக்குனர் சஜிசலீம் அவர்களின் முயற்சி சிறப்பு.
லாந்தர் நன்றாக எரியும்.
