ரயில் விமர்சனம்

 

வேலைக்கு மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள்.அப்படி புலம்பெயர்ந்தவர்கள் இங்கு என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகின்றனர் இவர்களால் இங்கு வேலை பார்ப்பவர்கள் எவ்விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர் குறிப்பாக இளைஞர்கள் எவ்விதமான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதனை தெளிவாக சொல்லியிருக்கிறது இந்த ரயில்.
ஒரு கிராமத்தில் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குங்குமராஜ் முத்துசாமி,அவரது மனைவி வைரமாலா,மற்றும் அந்த கிராமத்தில் இருக்கும் பஞ்சு மில்லில் வேலை பார்க்கும் மும்பையைச் பர்வேஸ் மெஹ்ரூ,வீட்டின் உரிமையாளர் ஒரு காது கேட்டகாத பாட்டியின் வீட்டில் வசிக்கின்றனர். குங்குமராஜ்ஜின் நண்பன் ரமேஷ் வைத்யா தினந்தோறும் குங்குமராஜை தனது அன்றாட குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி விடுகிறான்.
குங்குமராஜ் ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனது மனைவி வைரமாலா அவனை மேலும் மேலும் வெறுக்கிறாள்.எதிர் வீட்டில் வசிக்கும் பர்வேஸ் மெஹ்ரூ கடின உழைப்பாளி மேலும் வைரமாலாவை அவர் தனது சகோதரியை போல் பாவித்து அன்புடன் பழகுகிறார்.ஏற்கனவே முத்தையாவுக்கு வட இந்தியத் தொழிலாளர்கள் மீது உள்ள வெறுப்பை அவரது எதிர் வீட்டில் வசிக்கும் பர்வேஸ் மெஹ்ரூவிடம் காட்டுகிறார்.தன் மனைவி தன்னிடம் பாசம் காட்டாமல் எங்கோ இருந்து வந்தவனிடம் பாசத்துடன் பழகுவது மேலும் பர்வேஸ் மெஹ்ரூ மீது வெறுப்பை அதிகரிக்க வைக்கிறது. இந்நிலையில் பர்வேஸ் மெஹ்ரூ தன் குடும்பத்தை பார்க்க போக தயாராகும் போது ஒரு பையை வைரமாலாவிடம் கொடுத்து வைத்து விட்டு வெளியே செல்கிறார்.
குங்குமராஜ் புதிதாக கடை ஆரம்பிக்க பணம் வேண்டும் என்று தன் மனைவியிடம் கேட்டகிறார் ஏற்கனவே தனது தந்தை பணம்,பைக்,நிலம் கொடுத்ததை குடித்து அழித்ததால் மீண்டும் தனது தந்தையிடம் பணம் கேட்க முடியாது என்று கூறுகிறார். அப்போது ஏற்பட்ட குடும்ப சண்டையில் வைரமாலா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதே நேரத்தில் வெளியே செல்லும் பர்வேஸ் மெஹ்ரூ விபத்தில் இறந்து போகிறார். மேலும் அவர் வைரமாலாவிடம் கொடுத்து வைத்திருந்த பை காணாமல் போகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் குங்குமராஜ் முத்தையாவாக படத்தின் முக்கால் வாசி அழுக்கு சட்டையுடன்,எப்போதும் மது மற்றும் பீடி புகைப்பது என சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
வைரமாலா தனது உடல்மொழி மூலம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதையின் ஏனைய கதா பாத்திரங்களான பர்வேஸ் மெஹ்ரூ,ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை,ஷமீரா,பிண்ட்டூ,வந்தனா,பேபி தனிஷா,சுபாஷ்,தங்கமணி பிரபு,ரமேஷ் யந்த்ரா,ராஜேஷ்,ராமையா,சாம் டேனியல், அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
எஸ்.ஜே.ஜனனி அவர்களின் இசை மற்றும் பின்னணி இசையும்,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
நாகூரான் இராமச்சந்திரனின் படத்தொகுப்பும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வாழ்வியல் சார்ந்த கதையை மிக அழுத்தமான முறையில் எளிமையாக சொல்லி இருக்கும் இயக்குனர் பாஸ்கர் சக்திக்கு பாராட்டுகள்.
ரயில் உணர்ச்சி மயமான வேகமான விறுவிறுப்பான உணர்வு பூர்வமான பயணம்.