லால் சலாம் விமர்சனம்

ரஜினி லிவிங்ஸ்டன் இருவரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் உயிருக்குஉயிராக பழகி வருகின்றனர். அதேபோல் அந்த ஊர் மக்களும் நட்புடன் பழகி வருகின்றனர்.அந்த ஊரில் ரஜினி தொடங்கும் கிரிக்கெட் அணிதான் 3 ஸ்டார். அதில் லிவிங்ஸ்டனின் மகன் விஷ்ணு விஷால் விளையாடி வருகிறார். அவர் அந்த அணியில் இருந்து விலகி வேறொரு அணியில் விளையாடுகிறார். அந்த அணி வீழ்த்த முடியாது அணியாக மாறிவிடுகிறது. இதனால் மும்பையில் உள்ள ரஜினியின் மகன் விக்ராந்தை அழைத்து வந்து விளையாட வைக்கின்றனர். விக்ராந்துக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே ஆசை.அப்பா ரஜினிக்கும் அதுவே ஆசையாக இருந்தது. சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருக்கும் பகை மோதல் இருந்து வந்தது. அடிக்கடி மோதிக்கொள்வார்கள். இந்த நிலையில் மீண்டும் இருவரும் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்ளும் நிலமை வருகிறது.எதிரிகள் சிலர் இவர்களை வைத்து அரசியல் செய்யும் சூழ்ச்சியை உருவாக்குகிறார்கள்.இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா எதிரிகளின் அரசியல் சூழ்ச்சி நிறைவேறியதா முறியடிக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.
ரஜினிகாந்த் வழக்கமான தமது எதார்த்தமான ஸ்டைலாலும் வசன உச்சரிப்பாலும் பட்டையை கிளப்பி பெரிய பலம் சேர்த்துள்ளார்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் அவர்களுக்கான பணியை நிறைவாக செய்து அனைவரது பாராட்டையும் பெறுகின்றனர்.
மற்றும் ஜீவிதா , தம்பி ராமையா, செந்தில், தங்கதுரை, திவாகர், நிரோஷா தான்யாபாலகிருஷ்ணன், விவேக்பிரசன்னா, கே.எஸ் ரவிக்குமார் என ஏனைய கதாபாத்திரங்களும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
கபில்தேவ் அவர்கள் சிறப்பு தோற்றத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும் பிரவின்பாஸ்கர் அவர்களின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கமும் காட்சி வடிவமைப்பும் பாராட்டுக்குரியது.
லால் சலாம் சிறப்பு.