நாயகன் லெஜன்ட் சரவணன் ரகசிய உளவு அதிரடிப் படையிலிருக்கும் அதிகாரியான இவர் துறைமுகம் ஒன்றில் கார் மெக்கானிக் வேலை செய்துவருகிறார்.காது கேளாத தன் குழந்தை மீது அதிக பாசம் வைத்து வளர்த்துவருககிறார்.ஒரு சமயம் அந்த குழந்தையை சர்வதேச கடத்தல் கூட்டம் கடத்தி சரவணனை மிரட்டுகிறது.போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பலகோடி மதிப்புள்ள வெடிபொருள் மருந்தை மீட்டுத் தந்தால் தான் குழந்தையை விடுவிப்போம் என்கிறது. உயிருக்குயிராக வளர்க்கும் குழந்தைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து இந்த வேலையை செய்து முடிக்க துணிகிறார் சரவணன்.இதில் போலீஸ்,சர்வேச கடத்தல் கூட்டம்,சரவணன் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நடக்கிறது இந்த மோதலுக்கு என்ன காரணம் குழந்தையை சரவணனால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இப்படத்தில் நடித்திருப்பது அவர் நடிப்பின் மீதும் தனது கதாபாத்திரத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கைக்கு உதாரணம்.ஆக்க்ஷன் காட்சிகளை பர்ஃபெக்டாக செய்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.
கதாநாயகி பாயல் ராஜ்புத் தனது இயல்பான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் ஷாம்,ஆண்ட்ரியா,சந்தோஷ் பிரதாப்,பாயல் ராஜ்புத்,லால்,அமிர்தா அய்யர்,பாகுபலி பிரபாகரன்,வி டி வி கணேஷ்,ஐஸ்வர்யா,மரியம் ஜார்ஜ்,இயல், பத்மன்,யோகிராம்,வேல அருணாச்சலம், அறந்தாங்கி நிஷா,ஆதித்யா கதிர், நிரஞ்சன் தாமஸ்,படவா கோபி,அசோக் பாண்டியன்,சோபன் பாபு,விஜயலட்சுமி, முருகன்,ஜெய ஸ்மித்ரா குமார் நடராஜன் ஆகியோர் அனைவரும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு மாறுபட்ட கதைக்கு சிறந்த முறையில் த்ரில்லரான திரைக்கதை அமைத்து இயக்கி படத்திற்கான இரண்டாம் பாகத்துக்கான லீடையும் கொடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமாரை பாராட்டியே ஆகவேண்டும்.
லீடர் லெஜெண்ட் சரவணனின் சென்டிமென்ட்,ட்விஸ்ட்டுகள் நிறைந்த சிறந்த ஆக்க்ஷன் த்ரில்லர்.
