“லெனின் பாண்டியன்” விமர்சனம்

நாயகன் தர்ஷன் கணேசன் சிவகங்கை காவல் நிலையத்தில் கடைநிலை காவளாராக பணியாற்றி வருகிறார்.அவரை ஒன்றுக்கும் உதவாத காவலர் என்று மற்ற காவல்ர்கள் கேலி செய்கின்றனர்.பல அவமானங்களை சகித்துக்கொணடு அங்கே பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவியான கங்கை அமரனும் ரோஜவும் மீனாட்சி என்ற ஒரு ஆட்டை குழந்தைபோல் வளர்த்து வருகிறார்கள். ஒருநாள் அந்த ஆடு மணல் கொள்ளை லாரியில் அடிபட்டு இறந்து விடுகிறது. இதுகுறித்து மணல் கொள்ளை மாபியாவான யுகேந்திரன் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கின்றனர். இவர்களது புகாரை காவல் ஆய்வாளர் போஸ்வெங்கட் ஏற்க மறுத்ததோடு மற்றும் இல்லாமல் கங்கை அமரனை அடித்து துரத்தி விடுகிறார். அதனால் கங்கை அமரன் நீதிமன்றம் செல்கிறார்.நீதிபதியாக இருக்கும் ஜார்ஜ் மரியான் வழக்கை துரிதபடுத்தும்மாறு காவல்த்குறைக்கு உத்தரவிடுகிறார். அத்துடன் புகார்தாரர் கங்கை அமரனுக்கு பாதுகாவலராக காவலர் தர்ஷன் கணேசனை நியமனம் செய்து நீதிபதி ஜார்ஜ் மரியான் உத்தரவிடுகிறார்.வில்லன் யுகேந்திரனிடமிருந்து கங்கை அமரனை தர்ஷன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதே மீதிக்கதை.
தர்ஷன் கணேசன் சாதாரண காவலராக இருந்து தனது பொறுப்பை உணரும் கதாபாத்திரத்தின் மாற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
மற்றும் கங்கை அமரன்,ரோஜா,சிரிடாராவ், ஜார்ஜ் மரியான்,ஆடுகளம் நரேன், யுகேந்திரன்,போஸ் வெங்கட்,அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
இளையராஜாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவும் கதைக்கு மிகப்பெரிய பலம்.
மணல் கொள்ளையை மையமாக கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் டி.டி.பாலச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“லெனின் பாண்டியன்”சமூகப் பிரச்சனையையும்,ஒரு சாதாரண மனிதனின் போராட்டமும் இணந்த சிறந்த உருவாக்கம்.